ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக கே.எல்.ராகுல் மீது இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கடும் விளாசல்.

www.indcricketnews.com-indian-cricket-news-10034300

மும்பை: இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வென்றால் மட்டும்தான், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறமுடியும் என்ற நிலையில், முதல் 2 போட்டிகளில் வெற்றிகண்ட இந்தியா 2-0 என்று முன்னிலை வகித்துள்ளது.

இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் உள்ள மைதானத்தில் வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெறுவதற்கு முன்பாக, அணியில் ஒரேயொரு மாற்றம் மட்டும் நிகழந்துள்ளது. அது, கே.எல்.ராகுலின் துணைக்கேப்டன் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் இந்திய அணி முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் அபாரமாக விளையாடி வெற்றிகளை பதிவு செய்திருந்தாலும், துணைக்கேப்டன் கே.எல்.ராகுல் படுமோசமாக சொதப்பியது தான் சர்ச்சையை கிளப்பியது. இதுவரை அவர் விளையாடிய 3 இன்னிங்ஸ்களில் 20,17, 1 என சொற்ப ரன்களை மட்டும்தான் அவர் சேர்த்தார். இதன்காரணமாகவே அவரை நீக்கியே தீரவேண்டும் என கண்டன குரல்கள் பல எழுந்தன.

அதற்கேற்றார் போலவே பிசிசிஐ-ம் நடவடிக்கை எடுத்து 3வது மற்றும் 4வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை அறிவிக்கும் போது துணைக்கேப்டன் பதவியிலிருந்து கே.எல்.ராகுலை நீக்கிவிட்டது. கே.எல்.ராகுலிடம் இருந்து துணைக்கேப்டன் பதவியை பறித்ததன் மூலம், கடைசி இரண்டு போட்டிகளுக்கான ஆடும் லெவனில் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா? அல்லது அவரை நீக்கிவிட்டு சுப்மன் கில்லுக்கு வாய்ப்பை தருவார்களா என்ற குழப்பம் எழுந்துள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களுடனான சந்திப்பில் இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இதுகுறித்து கூறுகையில், “துணைக்கேப்டன் பதவி குறித்து அணி நிர்வாகம் தான் முடிவெடுக்கும். ஆனால் என்னைக்கேட்டால் இந்திய டெஸ்ட் அணிக்கு துணைக்கேப்டனை தேவையில்லை நியமிக்க வேண்டாம் என்று தான் நான் கூறுவேன். இந்திய களங்களில் சிறந்த 11 வீரர்களுடன் தான் செல்ல வேண்டும். துணைக்கேப்டன் என்ற பொறுப்பைகொண்டு வந்து அணிக்கு சிக்கலை உண்டாக்கி கொள்ளக்கூடாது.

ஏனெனில் அயல்நாட்டு களங்களை பொறுத்தவரையில் சிறந்த வீரர்கள் மட்டுமே தேர்வாகவே முடியும். ஆகையால், இந்திய களங்களில் விளையாடும்போது துணைக்கேப்டன் பதவி என்ற ஒன்று தேவையிருக்காது.

மேலும் சுப்மன் கில் சவால் கொடுத்து அனைத்து விதமான வடிவங்களிலும் அடித்து நொறுக்கிக்கொண்டு வந்துவிடுவார். கே.எல்.ராகுலும் அட்டகாசமான வீரர் தான். இருப்பினும் அவருடைய  மனநிலையை புரிந்துக்கொண்டு பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. இந்தியாவில் எத்தனையோ வீரர்கள் வாய்புக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். அதற்கேற்றார் போல தான் செயல்பட வேண்டும்.

சில சமயங்களில் ஆடும் லெவனில் விளையாடுபவர்களுக்கு இடைவேளை மிகவும் தேவை. அப்போது தான் அவர்களால் தங்களது விளையாட்டின் திறமையை மேலும் மேம்படுத்தி பழைய ஃபார்முடன் வலுவாக திரும்ப முடியும்.” இவ்வாறு ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

Be the first to comment on "ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக கே.எல்.ராகுல் மீது இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கடும் விளாசல்."

Leave a comment

Your email address will not be published.


*