உலக கால்பந்து ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த போட்டியாக விளங்குவது ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி ஆகும். இந்த போட்டி உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு அடுத்து பிரபலமடைந்துள்ளது. 4 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த போட்டியில் கடைசியாக போர்ச்சுக்கல் அணி சாம்பியன் பட்டம் பெற்றது.
16வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி அடுத்த ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி முதல் ஜூலை 12ம் தேதி வரை நடக்க இருக்கிறது. முதல் முறையாக 12 நாடுகள் இந்த போட்டியை நடத்துகின்றன. இந்தப் போட்டியில் மொத்தம் 24 அணிகள் பங்கு பெறுகின்றன. இதற்கு தகுதி சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் 55 அணிகள் 10 பிரிவாக பிரிக்கப்பட்டு விளையாடி வருகிறார்கள்.
கடைசியாக 2016-ம் ஆண்டு பிரான்சில்
நடந்த போட்டியில் போர்ச்சுக்கல் சாம்பியன் பட்டம் பெற்றது. அந்த அணி இறுதிப்போட்டியில்
1-0 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தியது. 16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்
ஷிப் போட்டி (யூரோ) அடுத்த ஆண்டு (2020) ஜூன் 12-ந்தேதி முதல் ஜூலை 12-ந்தேதி வரை நடக்கிறது.
முதல் முறையாக 12 நாடுகள் இந்தப்போட்டியை நடத்துகின்றன. இந்தப்போட்டியில் மொத்தம்
24 நாடுகள் பங்கேற்கின்றன. தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 55 அணிகள்
10 பிரிவாக பிரிக்கப்பட்டு விளையாடி வருகின்றன. ‘டி’ குரூப்பில் நடந்த ஆட்டம் ஒன்றில்
சுவிட்சர்லாந்து- ஜிப்ரால்டர் அணிகள் மோதின. சுவிட்சர்லாந்து அணி 6-1 என்ற கோல் கணக்கில்
வெற்றி பெற்றது.
இதன்மூலம் சுவிட்சர்லாந்து அந்த பிரிவில் 5 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வியுடன் 17 புள்ளிகள்
பெற்று தகுதி பெற்றது. 4-வது முறையாக அந்த அணி முன்னேறி உள்ளது.
டூப்ளின் நகரில் நடந்த ஆட்டத்தில் டென்மார்க்- அயர்லாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டம்
1-1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது. டென்மார்க் 16 புள்ளியுடன் தகுதி பெற்றது. அந்த
அணி 8-வது முறையாக நுழைந்துள்ளது.
டென்மார்க்
-அயர்லாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டம் ஒன்றுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் டிரா
ஆனது. ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிக்கு 19 அணிகள் தகுதி பெற்றுள்ளன.
அதன் விவரம்:-
பெல்ஜியம், இத்தாலி, ரஷியா, போலந்து, உக்ரைன், ஸ்பெயின், பிரான்ஸ், துருக்கி,
இங்கிலாந்து, செக்குடியரசு, பின்லாந்து, சுவீடன், குரோஷியா, ஆஸ்திரியா,
நெதர்லாந்து, ஜெர்மனி, போர்ச்சுக்கல், சுவிட்சர்லாந்து, டென்மார்க்
Be the first to comment on "சுவிட்சலாந்து மற்றும் டென்மார்க் ஐரோப்பிய கால்பந்து போட்டிக்கு தகுதி"