பும்ரா இல்லாத நிலையில், இரண்டு நட்சத்திர பந்துவீச்சாளர்களை இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் விரும்புகிறார்.

www.indcricketnews.com-indian-cricket-news-100153

மும்பை: டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் தொடங்கவிருக்கிறது. மேலும் இத்தொடருக்கு வலுவான இந்திய அணி அறிவிக்கப்பட்டாலும், பெரும் பின்னடைவாக பார்க்கப்படுவது இந்திய அணி பந்துவீச்சின் முதுகெலும்பாக திகழும் பும்ராவின் விலகல் தான்.

டி20 ஃபார்மேட்டில் உலகின் நட்சத்திர பந்துவீச்சாளரான திகழும் பும்ரா, கடந்த சில மாதங்களாகவே முதுகு வலியால் அவதிப்பட்டு வந்தார். இருப்பினும் பிசிசிஐ தனது நேரடி கண்காணிப்பின் கீழ் பும்ராவுக்கு தொடர் சிகிச்சைகளை அளித்து வந்தது.

இந்நிலையில் காயத்திலிருந்து மெல்ல மீண்ட அவர், வலை பயிற்சியில் ஈடுபடத் தொடங்கியதை அடுத்து தென்னாபிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெற்றிருந்தார். ஆனால் பும்ராவின் காயம் முழுமையாக சரியாகவில்லை என மருத்துவக் குழு கூறியதால், தொடரின் பாதியேலேயே இந்திய அணியிலிருந்து வெளியேற்றப்பட்டார். 

இருப்பினும் காயத்திலிருந்து மீண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் இடம்பெறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், பும்ரா நான்கு முதல் 6 மாதங்கள் வரை ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவக் குழு அறிவுறுத்தியதால், டி20 உலககோப்பை தொடரிலிருந்து  வெளியேற்றப்பட்டதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமான அறிவிப்பை  வெளியிட்டது.

இந்நிலையில் அவருக்கு பதிலாக யாரை அணியில் சேர்ப்பது என்ற குழப்பம் இந்திய அணியில் நீடித்து வருகிறது. ஆஸ்திரேலிய மைதானத்தில் அனுபவமில்லாத புதிய வேகப்பந்துவீச்சாளர்களை விளையாடவைத்தால் அது விஷ பரீட்சையில் தான் முடியும் என்பது முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் கருத்தாக உள்ளது.

இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு நிலைமை குறித்து முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா தனது டிவிட்டர் பக்கத்தில், “டெத் ஓவரில் சிறப்பாக பந்துவீசும் பும்ரா இந்திய அணியின் விருப்பத் தேர்வாக இருந்தது. ஆனால் காயம் காரணமாக அவர் இந்திய அணியில் இடம்பெறாததை தொடர்ந்து, தேர்வாளர்கள் மற்றும் அணி நிர்வாகம் மாற்று வீரர் குறித்து தீவிரமாக மறுபரிசீலனை செய்யவில்லை என்றால் எனக்கு ஆச்சரியமாகவுள்ளது”என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து கூறுகையில், “டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் கூடுதலாக இரண்டு வேகப்பந்துவீச்சாளர்களை சேர்க்க வேண்டும். ஒருவர் வேகமாக பந்துவீசக் கூடியவராகவும், யார்க்கர் பந்துகளை துல்லியமாகவும், நேர்த்தியாகவும் வீசக்கூடியவராக இருக்க வேண்டும், அவர் முகமது ஷமி. மற்றொரு பந்துவீச்சாளர் ஸ்விங் செய்யும் ஒருவராக இருக்க வேண்டும், அவர் தீபக் சாஹர். அக்டோபர் 15ஆம் தேதி வரை அணியில் ஏற்படுத்தும் மாற்றங்களுக்கு எந்தவொரு அனுமதியும் பெற வேண்டியதில்லை என்பதால், சுழற்பந்துவீச்சாளரை தவிர்த்து ஐந்து வேகப்பந்துவீச்சாளர்களுடன் டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி பங்கேற்கலாம். ஏனெனில்  ஆஸ்திரேலியா ஆடுகளத்தை பொறுத்தவரை சுழற்பந்துவீச்சை விட வேகப்பந்துவீச்சுக்கே அதிகம் உதவும் ,” என்று சோப்ரா தனது யூடியூப் சேனலில் தெரிவித்தார்.

1 Comment on "பும்ரா இல்லாத நிலையில், இரண்டு நட்சத்திர பந்துவீச்சாளர்களை இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் விரும்புகிறார்."

  1. Thanks for shening. I read many of your blog posts, cool, your blog is very good. https://www.binance.com/en/register?ref=P9L9FQKY

Leave a comment

Your email address will not be published.


*