ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி மிடில் ஆர்டர் பேட்டிங்கை பலப்படுத்தவுள்ளது.

www.indcricketnews.com-indian-cricket-news-100203

மொஹாலி: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று மொஹாலியாவில் நடைபெறவுள்ளது. உலகக் கோப்பைக்கு முன்பாக வேகப்பந்துவீச்சாளர் சிலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டாலும், ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களில் இந்திய அணி தனது முழுபலத்துடன் விளையாடி ப்ளேயிங் லெவனை பரிசோதித்து பார்க்கவிருக்கிறது.

ஏனெனில் ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக பேட்டிங் செய்தாலும், பும்ரா, ஹர்ஷல் படேல் ஆகியோர் இல்லாததால் பந்துவீச்சு பெரிதாக எடுபடவில்லை. ஆனால் டி20 உலகக் கோப்பை தொடரில் இவ்விருவரும் இடம்பெற்று தங்களது தாக்குதலை வலுபடுத்தவுள்ளனர்.

இந்நிலையில் வேகத்திற்கும் பவுன்சிற்கும் சாதகமான ஆஸ்திரேலியா மைதானங்களில் டி20 உலகக் கோப்பையில் விளையாட இந்திய அணி 6வது பந்துவீச்சாளருடன் களமிறங்குமா அல்லது மிடில் ஆர்டரை மேலும் பலப்படுத்தும் வகையில் கூடுதல் பேட்ஸ்மேனுக்கு வாய்ப்பளிக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.

கடந்த சில போட்டிகளில் கே.எல்.ராகுல் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை என்றாலும், தன்னுடன் தொடக்க ஆட்டக்காரராக ராகுல் தான் இருப்பார், சில நேரங்களில் விராட் கோலியை ஓப்பனிங் இறக்க வாய்ப்புள்ளது என்று ரோஹித் ஷர்மா தெளிவுபடுத்தியுள்ளார்.

அதிலும் ஆசியக் கோப்பைப் போட்டியில் சதம் அடித்து கோஹ்லி நல்ல ஃபார்மில் இருப்பதால் அவருக்கு ஓபனிங்கை பரிசீலிக்க வாய்ப்புள்ளது. இந்திய அணியின் டாப்-4 இடங்களுக்கான வீரர்கள் பெரும்பாலும் உறுதி செய்யப்பட்டாலும், விக்கெட் கீப்பர்களான தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பந்த் ஆகிய இருவரில் யாருக்கு வாய்ப்பு என்பது பெரிய கேள்வி்க்குறியாகவுள்ளது.  

ஆனால் நெருக்கடியான தருணங்களில் ஆட்டத்தை மாற்றும் அனுபவம் சிறந்த பினிஷரான தினேஷுக்கு தான் அதிகம் உண்டு. இருப்பினும் ஆசியக் கோப்பை தொடரில் தினேஷ் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை என்பதால் டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக வரும் இந்த இரு டி20 தொடர்களும் முக்கியமானவையாகும்.

மேலும் ரவீந்திர ஜடேஜா இல்லாததால் ரிஷப் பந்த் கூடுதல் பேட்ஸ்மேனுக்கான வாய்ப்பை பெறலாம். இந்திய அணியில் தீபக் ஹூடா இடம்பெற்றிருந்தாலும் ஆல்ரவுண்டராக அல்லது பேட்ஸ்மேனாக இவரை பயன்படுத்துவதில் இன்னும் குழப்பம் நீடிக்கிறது.

ஜடேஜா காயம் காரணமாக உலகக் கோப்பையில் இடம்பெறாதது, அணியை பேலன்ஸ் செய்வதில் சிரமம் நீடிக்கிறது. ஏனெனில் இந்தியா 6 பந்துவீச்சாளர்கள் என்ற நிலையிலயிருந்து 5 பந்துவீச்சாளர்களுடன் விளையாட வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது.

ஒருவேலை ஹர்திக் பாண்டியாவுடன் அக்ஸர் படேல் விளையாடடினால் கூடுதல்  பந்துவீச்சாளர் கிடைப்பார். அக்ஸர் படேல், சாஹல் ஆகிய இரு சுழற்பந்துவீச்சாளர்கள், பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்சல், ஹர்திக் ஆகிய 4 வேகப்பந்துவீச்சாளர்கள் என களமிறங்கலாம்.

ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் இந்திய ஆடுகளங்களை விட வேறுபட்டவை என்பதால் அணியில் வீரர்களுக்கு அதைவைத்தே முக்கியத்துவம் அளிக்கவேண்டும். மேலும் இத்தொடரில் டேவிட் வார்னருக்கு ஆஸ்திரேலியா அணி ஓய்வு அளித்துள்ளது. ஸ்டாய்னிஷ், மிட்ஷெல் ஸ்டார்க், மிட்ஷெல் மார்ஷ் ஆகியோர் காயத்தால் அணியில் இடம்பெறவில்லை. ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் ஆரோன் ஃபின்ச், டிம் டேவிட் ஆகியோரின் ஆட்டம் அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Be the first to comment on "ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி மிடில் ஆர்டர் பேட்டிங்கை பலப்படுத்தவுள்ளது."

Leave a comment

Your email address will not be published.


*