மும்பை: டி20 உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரையிலான தேதிகளில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது . இந்நிலையில் கடந்த திங்களன்று ரோஹித் ஷர்மா தலைமையிலான டி20 உலகக் கோப்பைக்கான 15 வீரர்களைக் கொண்ட இந்திய அணியை பிபிசிஐ நிர்வாகம் அறிவித்தது.
இலக்கை நிர்ணயிக்கும் போது இந்தியா எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்பது குறித்து நிறைய பேசப்பட்டு வரும் நிலையில், பல முன்னாள் வீரர்கள் இந்தியாவின் பேட்டிங் ஆர்டர் குறித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டை டாப் 4 பேட்டிங் ஆர்டருக்குள் தான் இறக்கவேண்டும். அதன்பின்னர் இறக்குவதென்றால் அவர் சரிப்பட்டுவரமாட்டார் என்று தெரிவித்துள்ளனர். ஏனெனில் 2022 ஆசியக் கோப்பையில் ரிஷப் பந்த் 14, 17 மற்றும் 20* ரன்களை மட்டுமே எடுத்து 124.39 என்ற கூட்டு ஸ்ட்ரைக்-ரேட்டில் பதிவு செய்தார். அந்த ஒவ்வொரு இன்னிங்ஸிலும் அவர் மிடில்-ஆர்டரில் பேட் செய்தார்.
இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்காமல் டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து சொதப்பி வரும் ரிஷப் பண்ட்டை எடுத்தது விமர்சனத்துக்கு உள்ளாகி வரும் நிலையில், அவரை மிடில் ஆர்டரில் இறக்காமல் ஓபனிங்கில் இறக்கலாம் என்று வாசிம் ஜாஃபர் கூறியுள்ளார்.
மேலும் இதுகுறித்து பேசிய அவர், “டி20 கிரிக்கெட்டில் தொடக்க ஆட்டக்காரராக ரிஷப் பண்ட் இன்னும் சிறப்பாக விளையாடுவார் என்று நான் நம்புகிறேன். மேலும் மிடில் ஆர்டரில் விளையாடும் போது ரிஷப் பண்ட் திணறி வருவதால் அவரது ஷாட் தேர்வு கேள்விக்குறியாகியுள்ளது. ஆனால் பெரிய ஷாட் அடிக்கும் திறன் அவரிடம் உள்ளதால், டி20 ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவது தான் அவருக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.
2013ல் முன்னாள் இந்திய கேப்டன் எம்எஸ் தோனி ரோஹித்தை ஓபனிங்கில் துவக்கி வைத்ததன் மூலம் அவரது வாழ்க்கையின் போக்கையே மாற்றினார். அதன்பின்னர் நடந்ததெல்லாம் வரலாறு. அதேபோல, கேப்டன் ரோஹித் ஷர்மாவும் ரிஷப் பண்ட்டை ஓபனிங்கில் இறக்கிவிட்டு அவர் 4ம் வரிசையில் களமிறங்கலாம்.
மேலும் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் – ரிஷப் பண்ட் , 3ம் வரிசையில் விராட் கோலி, 4ம் வரிசையில் ரோஹித் ஷர்மா , 5ம் வரிசையில் சூர்யக்குமார் யாதவ். இதுதான் எனது டாப் 5 பேட்டிங் ஆர்டர்” இவ்வாறு வாசிம் ஜாஃபர் பேட்டிங் ஆர்டர் குறித்து கருத்து கூறியுள்ளார்.
Thanks for shening. I read many of your blog posts, cool, your blog is very good. https://www.binance.com/en/register?ref=P9L9FQKY