T20 தொடரை வென்றது இந்தியா : சகார், ஸ்ரேயாஸ் மற்றும் ராகுல் அபாரம்

இந்தியா – வங்கதேசம் இடையே நடந்த மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டியில் தான் தீபக் சாஹர் இந்த சாதனையை செய்துள்ளார். இந்தப் போட்டியில் வென்றால் தான் தொடரை கைப்பற்ற முடியும் என்ற கட்டாயத்தில் ஆடியது இந்திய அணி.

ரோகித் சர்மா, தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ரோகித் சர்மா 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து லோகேஷ் ராகுல் களம் இறங்கினார். தவான் 19 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

3-வது விக்கெட்டுக்கு ராகுல், ஷ்ரேயாஸ் ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

லோகேஷ் ராகுல் 35 பந்தில் 52 எடுத்து ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் அய்யர் 33 பந்தில் 62 ரன்கள் விளாசி அவுட் ஆனார். இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் சேர்த்துள்ளது.

இதனையடுத்து வங்காள தேச அணி களமிறங்கியது. முதலில் 2 விக்கெட்டுகளை இழந்த போதும் 3-வது விக்கெட்டுக்கு மிதுன் நெய்ம் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய நெய்ம் அரை சதம் அடித்து அசத்தினார். மிதுன் 27 ரன்கள் எடுத்து வெளியேற அடுத்து வந்த ரகீம் டக் அவுட் முறையில் வெளியேறினார்கள்.

முன்னதாக இலங்கை வீரர் மென்டிஸ் 2012 ஆம் ஆண்டு 8 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்கள் வீழ்த்தியதே சிறந்த பந்துவீச்சாக இருந்தது. அதை முறியடித்து இருக்கிறார் தீபக் சாஹர்.

ஒரு கட்டத்தில் வங்காள தேச அணி வெற்றி பெரும் என்று இருந்த நிலையில் துபே ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அதிரடியாக விளையாடிய நெய்ம் 81 ரன்களில் அவர் பந்தில் வெளியேறினார். சாஹர் மூன்றாவது போட்டியில் 6 விக்கெட்கள் வீழ்த்தியதால் ஆட்டநாயகன் விருதையும், இந்த தொடரில் சிறந்த பந்துவீச்சு, எகானமி, ஸ்ட்ரைக் ரேட் வைத்து இருந்த பந்துவீச்சாளர் என்பதால் தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

இந்திய அணியின் இளம் வேகப் பந்துவீச்சாளர் தீபக் சாஹர் வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சர்வதேச டி20 போட்டிகளில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்து அசத்தினார். கடந்த ஏழு ஆண்டுகளாக எந்த பந்துவீச்சாளராலும் முறியடிக்க முடியாத சிறந்த பந்துவீச்சு சாதனையை விக்கெட் வேட்டை நடத்தி முறியடித்தார் தீபக். மேலும், ஹாட்ரிக் சாதனையும் படைத்து அனைவரையும் மிரள வைத்துள்ளார் தீபக் சாஹர்.

Be the first to comment on "T20 தொடரை வென்றது இந்தியா : சகார், ஸ்ரேயாஸ் மற்றும் ராகுல் அபாரம்"

Leave a comment

Your email address will not be published.


*