ஹர்திக் பாண்டியா தற்போது சற்று நிதானமாகவும் மேலும் நம்பிக்கையுடனும் உள்ளார்”- ரோஹித் சர்மா

www.indcricketnews.com-indian-cricket-news-010105

துபாய்: ஆசியக் கோப்பை தொடரின் இரண்டாவது லீக் ஆட்டத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் அணிகள் ஆகஸ்ட் 28ஆம் தேதியன்று பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வுசெய்தது இந்திய அணி. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 147 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.

இதனையடுத்து இலக்கை துரத்திக் கொண்டு களமிறங்கிய இந்திய அணி 19.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன்,5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. குறிப்பாக கடைசி 3 பந்தில் 6 ரன்கள் தேவை என்ற நிலையில், ஹர்திக் பாண்டியா அசால்டாக சிக்ஸரை விளாசி அணிக்கு வெற்றியை தேடித்தந்தார்.

இந்நிலையில் போட்டி முடிந்தவுடன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கேப்டன் ரோஹித் ஷர்மா, ஹர்திக் பாண்டியாவின் செயல்பாடு குறித்து பாராட்டியுளளார். மேலும் பேசிய அவர் ” 147 ரன்களுக்குள் பாகிஸ்தான் அணியை சுருட்டியதுடன், வெற்றி பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கை இருந்தது. எங்களை நாங்கள் முழுமையாக நம்பியதற்கான பரிசு தான் இது. போட்டி துவங்குவதற்கு முன்னதாகவே ஒவ்வொரு வீரருக்கும் தனித்தனியே பணி உள்ளது என்பதை விளக்கமாக எடுத்துக் கூறிமயிருந்தேன். அதை அவர்கள் சிறப்பாக செய்தனர்.

கடந்த ஓராண்டாக இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் செய்த முயற்சிகளுக்கு பலன் கிடைத்துள்ளது. அமீரக களங்களை நன்கு புரிந்துக்கொண்டுள்ளனர். எனவே எப்பேர்பட்ட காலநிலையிலும் இந்திய வேகப்பந்துவீச்சாளர்களால் பந்துவீச முடியும். இந்நிலையில் காயத்திலிருந்து குணமடைந்து வந்த ஹர்திக் பாண்டியா மிக புத்திசாலித்தனமாக செயல்பட்டு வருகிறார். அதுமட்டுமின்றி காயம் காரணமாக அவதிப்பட்டபோது ,தன்னுடைய வீக்னஸ் எது என்பதை கண்டறிந்த ஹர்திக் அதை சரி செய்தார்.

இருப்பினும் அவரது பேட்டிங் தரம் அனைவரும் அறிந்ததே. தற்போது 140+ கிலோமீட்டர் வேகத்தில் அசால்டாக பந்துவீசும் அவர், பேட்டிங்கிலும் எவ்வித குறையும் இல்லாமல் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.அதிலும் குறிப்பாக ஷார்ட் பால்களை அற்புதமாக வீசுகிறார். மேலும் ஹர்திக் பாண்டியா தற்போது மிக அமைதியாகயும், பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் என்ன செய்ய வேண்டும் என்பதில் அதிக நம்பிக்கையுடன் இருக்கிறார்.

ஏனெனில் ஒரு ஓவருக்கு 10 ரன்கள் தேவை என்ற உயர் அழுத்தத்தில், நீங்கள் பீதி அடையலாம். ஆனால் ஒருபோதும் அவர் காட்டிக்கொள்ளவில்லை. போட்டி கட்டுப்பாட்டில் இருப்பதை அறிந்திருந்தார். எனவே வெற்றி பெற்றதற்கான அனைத்து காரணங்களும் அவரையே சாரும்” என ரோஹித் ஷர்மா பாராட்டியுள்ளார்.

இதனைதொடர்ந்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் இதுகுறித்து கூறுகையில், “நாங்கள் ஆட்டத்தை தொடங்கிய விதம் சிறப்பாக இருந்தது. ஆனால் நாங்கள் 10-15 ரன்கள் குறைவாக அடித்துவிட்டோம். இப்போட்டியில் பந்துவீச்சாளர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டனர். 15 ரன்வரை கடைசி ஓவரை வைத்திருக்க நினைத்தோம். ஆனால் அது நடக்கவில்லை, ஹர்திக் பாண்ட்யா அதனை முறியடித்துவிட்டார்” இவ்வாறு பாபர் கூறியுள்ளார்.

1 Comment on "ஹர்திக் பாண்டியா தற்போது சற்று நிதானமாகவும் மேலும் நம்பிக்கையுடனும் உள்ளார்”- ரோஹித் சர்மா"

  1. Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.

Leave a comment

Your email address will not be published.


*