ஆசிய கோப்பைக்கு முன்னதாக தனது மோசமான பார்ம் குறித்து இந்திய நட்சத்திர பேட்டர் விராட் கோலி மௌனம் கலைத்தார்.

www.indcricketnews.com-indian-cricket-news-0042

அமீரகம்: 2018ஆம் ஆண்டிற்கு பிறகு ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் சனிக்கிழமை (ஆகஸ்ட் 27 ) முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. 15ஆவது ஐபிஎல் சீசனுக்குப் பிறகு இந்திய அணி சிறப்பாக விளையாடி வருவதால், ஆசியக் கோப்பையிலும் அபாரமாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் பும்ரா காயம் காரணமாக விலகியதால், வேறு வழியில்லாமல் ஆவேஷ் கான் சேர்க்கப்பட்டார். ஆனால் இவர் நடந்து முடிந்த ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரில் படுமோசமாக சொதப்பி ஷாக் கொடுத்தார். அதேபோல கடந்த பிப்ரவரிக்கு பிறகு இந்திய அணியில் இடம்பெறாமலிருந்த ராகுலும் ஜிம்பாப்வேவுக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்படவில்லை.

இந்த இரண்டு விஷயங்களும் இந்திய அணியில் பெரும் பின்னடைவாக பார்க்கப்டுகின்ற நிலையில், ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் மிகமுக்கியமான மற்றொரு பிரச்சினையாக பார்க்கப்படுவது விராட் கோலியின் ஃபார்ம்தான்.

ஏனெனில் ஐபிஎல் 15ஆவது சீசனில் சிறப்பாக செயல்படாத கோஹ்லி, கடைசியாக இங்கிலாந்து தொடரில் பங்கேற்று அதிகபட்சமாக 20 ரன்களை மட்டுமே அடித்தார். இதன்பின்னர் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரின்போது ஓய்வுக்கு சென்ற அவர்,நேரடியாக ஆசியக் கோப்பைக்கு தான் தற்போது வரவுள்ளார்.

அதுமட்டுமின்றி கோஹ்லி தனது திறமையை நிரூபிக்காமல் ஓய்வுக்கு சென்றிருப்பதால், அவர் ஆசியக் கோப்பையில் எப்படி விளையாடப் போகிறாரோ என்ற அச்சமும், குழப்பமும் ரசிகர்கள் மத்தியில் நிலவிவருகிறது.

ஆசியக் கோப்பையில் இந்திய அணி தனது முதல் லீக் போட்டியாக பாகிஸ்தான் அணியுடன் வரும் ஆகஸ்ட் 28ம் தேதியன்று பலப்பரீட்சை நடத்துகிறது. மேலும் இப்போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சிறந்த ரெக்கார்ட்களை வைத்திருக்கும் கோஹ்லி, இந்தமுறையும் வழக்கம்போல நிச்சயம் அதிரடி காட்டி அதை வைத்தே கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை கோஹ்லி சொதப்பினால், பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட அதிக வாய்ப்புள்ளது என்ற தகவலும் வெளியாகிவருகிறது.

இந்நிலையில் ஆசியக் கோப்பையில் எப்படி விளையாடுவேன் என்று தனது ஃபார்ம் குறித்து விராட் கோலியே அதிரடியாக பேசியுள்ளார். அதில், “இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் நடைபெற்ற சொதப்பல்கள் எல்லாவற்றிக்கும் காரணம் ஒரே மாதிரியான தவறை செய்ததால் தான். அதனை நான் ஓய்வின்போது கண்டறிந்து, அந்த பிரச்சினைகளை சரி செய்துவிட்டேன். அதனால் சரிசெய்வதற்கு தற்போது எந்தவொரு தவறுகளும் இல்லை, மீண்டு வரவேண்டிய அவசியமும் இல்லை.

மேலும் எந்தவித பிரச்சினையும் இல்லாததால், பயிற்சியின் போது நான் நன்றாகத்தான் பேட்டிங் செய்து வருகிறேன். அதுமட்டுமின்றி எனக்கான ஃப்ளோ தற்போது கிடைக்கிறது. அந்த ப்ளோ நான் சிறப்பாகத்தான் விளையாடப் போகிறேன் என்பதை வெளிக்காட்டுகிறது. மேலும் நான் எந்தளவிற்கு விளையாடுகிறேன் என்பதை உணர்ந்து மாற்றியுள்ளேன். எனவே ஆசியக் கோப்பையில் நான் நிச்சயம் சிறப்பாக விளையாடுவேன். அதற்கு நான் தயார்நிலையில் உள்ளேன்” இவ்வாறு கோஹ்லி அறிவித்துள்ளார்.

Be the first to comment on "ஆசிய கோப்பைக்கு முன்னதாக தனது மோசமான பார்ம் குறித்து இந்திய நட்சத்திர பேட்டர் விராட் கோலி மௌனம் கலைத்தார்."

Leave a comment

Your email address will not be published.


*