வெஸ்ட் இண்டீஸ் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானை சுலபமாக வென்றது

ஷாய் ஹோப், ராஸ்டன் சேஸ் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் ஆப்கானிஸ்தானை எளிதாக வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்.

ஆப்கானிஸ்தான் – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி லக்னோவில் நடைபெற்றது. இன்று பகல் – இரவு போட்டியான நடைபெற்ற இந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பொல்லார்டு டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஆப்கானிஸ்தான் முதலில் மட்டையாட்டம் செய்தது.

ரஹ்மத் ஷா (61), இக்ரம் அலிகில் (58), அஸ்கர் ஆஃப்கன் (35) சிறப்பான விளையாடினர். மற்ற வீரர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ஆப்கானிஸ்தான் 194 ஓட்டத்தில் சுருண்டது.

பின்னர் 195 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் செய்தது. ஷாய் ஹோப், லிவிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். லிவிஸ் 7 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹெட்மையர் 3 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி 7.4 ஓவரில் 25 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுக்களை இழந்தது.


ராஸ்டன் சேஸ் 94 ரன்கள் எடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். ஹோப் ஆட்டமிழக்காமல் 8 ரன்கள் சேர்க்க வெஸ்ட் இண்டீஸ் 46.3 ஓவரில் 3 விகெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

அவர் பொல்லார்டு கடந்த 2016ம் ஆண்டுக்கு பிறகு ஒருநாள் போட்டிகளில் ஆடவேயில்லை. மூன்று வருடம் ஒருநாள் போட்டியில் ஆடவேயில்லாத நிலையிலும் பொல்லார்டு மீது . நம்பிக்கை வைத்து அவர் கேப்டனாக்கப்பட்டுள்ளார். அதற்கான காரணத்தை பொல்லார்டுக்கு வலுவாக தனது ஆதரவை தெரிவித்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ரிக்கி ஸ்கெரிட்டே தெரிவித்துள்ளார். 3 ஆண்டுகள் ஒருநாள். கிரிக்கெட்டில் ஆடாத பொல்லார்டை கேப்டனாக்கியது ஏன் என்பது குறித்து பேசிய ஸ்கெரிட்,

ஹோல்டர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முக்கியமான சக்தி. அவர் தான் டெஸ்ட் கேப்டனாக தொடரவுள்ளார். அப்போது ஒருநாள் அணிக்கு பொல்லார்டு கேப்டன் ஆகியிருப்பதால், அணியில் தனக்கான இடத்துக்காக ஹோல்டர் போட்டி போட வேண்டும். அது அவரை மேலும் சிறந்த கிரிக்கெட் வீரராக உருவாக்க உதவும்.

ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணியை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்செல்வதற்கு பொல்லார்டு தான் சரியான நபர். பொல்லார்டிடம் எனக்கு ரொம்ப பிடித்த விஷயம், ஆட்டத்தின் மீதான அவரது ஆர்வமும் அர்ப்பணிப்பும்தான் என்று ஸ்கெரிட் தெரிவித்துள்ளார்.

Be the first to comment on "வெஸ்ட் இண்டீஸ் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானை சுலபமாக வென்றது"

Leave a comment

Your email address will not be published.


*