ரினிடாட்: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி நேற்று குயீன்ஸ்பார்க் ஓவல் மையதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது.
அதன்படி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடக்க ஆட்டக்காரராளான ஷாய் ஹோப்-கைல் மேயர்ஸ் ஜோடி அதிரடியாக தொடக்கத்தை தந்த நிலையில்,ஹோப் அரைசதம் கடந்து அசத்தினார். ஆனால் மறுமுனையில் கைல் 39(23) ரன்கள் எடுத்தபோது தீபக் ஹூடா பந்துவீச்சில் ஆட்டமிழக்க,தொடர்ந்து களமிறங்கிய ஷமாரா புரூக்ஸ் 35(36) ரன்களுடன் அக்ஸர் படேல் பந்துவீச்சில் நடையைக்கட்டினார்.
இதனைத்தொடர்ந்து பார்ட்னரஷிப் அமைத்த ஷாய் ஹோப்-நிக்கோலஸ் பூரன் ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த பூரன் 74(77) ரன்களுடன் ஷர்துல் தாகூர் பந்துவீச்சில் க்ளின் போல்டாகி பெவிலியன் திரும்பினார்.
ஆனால் மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹோப் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 13வது சதத்தை பதிவுசெய்தார். இந்நிலையில் இறுதியில் ஷர்துல் தாகூர் பந்துவீச்சில் ரோவ்மன் போவல் 13(10) ரன்களுடனும், ஹோப் 115(135) ரன்களுடனும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால் 50 ஓவர்கள் முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கெட் இழப்புக்கு 311 ரன்களை எடுத்தது.
இதையடுத்து இலக்கை துரத்திக் கொண்டு களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் 13(31) ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சுப்மன் கில் 43(49) ரன்களில் ஆட்டமிழக்க, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் 9(8) ரன்களுக்கெல்லாம் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.
ஆனால் அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த ஸ்ரேயாஸ் ஐயர்-சஞ்சு சாம்சன் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். இந்நிலையில் சிறப்பாக விளையாடி அரைசதம் விளாசிய ஸ்ரேயாஸ் ஐயர் 63(71) ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட போது 54(51) ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேறினார்.
மேலும் தொடர்ந்து களமிறங்கி ரன் குவிப்பில் ஈடுபட்ட தீபக் ஹூடா 33(36) ரன்களில் ஆடட்மிழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஷர்துல் தாகூர் 3(6),அவேஷ் கான் 10(12) ஆகியோர் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் ஆட்டத்தில் பரபரப்பை ஏற்பட்டது.
ஒருபுறம் விக்கெட்டுகள் தொடர்ந்து சரிந்தாலும் ,மறுபுறம் அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்ட அக்ஸர் படேல் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். இதனால் இந்திய அணி 49.4 ஓவரிலேயே 8 விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் குவித்து, 2 விக்கெட் வித்தியாசத்தில் 2-வது ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்றதுடன் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது. இதில் 64(35) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்திலிருந்த அக்ஸர் படேலுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
Be the first to comment on "அக்ஸர் படேல்-ன் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி த்ரில் வெற்றிபெற்றது."