டிரிண்டாட்: மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது. இந்நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஒருநாள் போட்டி இன்று(ஜூலை 22) நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடருக்கான இந்திய அணியில் ரோகித் ஷர்மா,விராட் கோலி, பும்ரா போன்ற முக்கிய வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதையடுத்து, ஷிகர் தவான் தலைமையில் இளம் இந்திய அணி களமிறங்குகிறது.
இந்த ஒருநாள் போட்டியில் எந்த எந்த இளம் வீரர்களுக்கு இடம் கிடைக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் காணப்படுகிறது. மேலும் இத்தொடரில் கேப்டன் ரோகித் ஷர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஆகிய இருவருமே இல்லாத நிலையில், கேப்டன் ஷிகர் தவான் முதல் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கவுள்ளார்.
ஆனால் ஷிகர் தவானுடன் தொடக்க ஜோடியாக களமிறங்க இஷான் கிஷன், சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கு இடையே கடும்போட்டி நிலவி வருகின்றது. இதனால் யாரை தேர்வு செய்வது என்ற குழப்பம் அணி நிர்வாகத்துக்கு தற்போது ஏற்பட்டுள்ளது.
இதில் விராட் கோலி இல்லாததால் அவர் இடத்தில் சுப்மன் கில் பொறந்துவார் என்ற நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த தென்னாப்பிரிக்கா தொடரில் அசத்திய இஷான் கிஷன் தொடக்க வீரராகவும், விக்கெட் வீரராகவும் களமிறங்க வாய்ப்புகள் அதிகமாக தெரிகிறது.
ஏனெனில் அண்மை காலங்காளாக ருதுராஜ் கெய்க்வாட் சரிவர செயல்படாததால் இப்போட்டியில் தொடக்க வீரராக களமிறங்க வாய்பில்லை என்றே அனைவரும் கருதுகின்றனர். இருப்பினும் 2021 ஐபிஎல் தொடரில் 16 போட்டிகளில் விளையாடி 633 ரன்களை குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்று, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4வது கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார். ஆனால் இந்த வருட ஐபிஎல் தொடரில் பல போட்டிகளில் டக் அவுட்டாகி வெளியேறினார்.
அதுமட்டுமின்றி தென்னாப்பிரிக்கவுக்கு எதிரான டி20 தொடரில் இஷான் கிஷனுடன் களமிறங்கய இவர், 1அரைசதம் மட்டுமே அடித்து மீதமுள்ள 2 போட்டிகளில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். இந்நிலையில் உள்ளூர் கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடிய இவர் தொடக்க வீரராக களமிறங்க ததகுதியானவர் என்று முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாஃபர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் இதுகுறித்து டிவிட்டர் பக்கத்தில் பேசிய இவர், ” மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் இஷான் கிஷனுடன் தொடக்க வீரராக ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனெனில் விஜய் ஹசாரே போட்டியில் 5 இன்னிங்ஸில் 4 சதங்களை அடித்த இவர் தகுதியானவர். அதுமட்டுமின்றி ஷிகர் தவான் இடதுகை பேட்ஸ்மேன் என்பதால் வலதுகை பேட்ஸ்மேன் ஆன ருத்துராஜ் கெய்க்வாட் தான் அவருக்கு ஜோடியாக இடம்பெறவேண்டும் ” இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
Be the first to comment on "மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்த இளம் வீரர் தவானுடன் ஓபன் செய்ய வேண்டும் -வாசிம் ஜாஃபர்"