கான்பெர்ராவில் நடந்த 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பதம் பார்த்தது. ஸ்டீவன் சுமித் 80 ரன்கள் விளாசினார்.
ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு
இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் பேட்டி கான்பெர்ராவில் இன்று நடைபெற்றது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. பாபர் அசாம், பகர் ஜமான் ஆகியோர் தொடக்க
வீரர்களாக களம் இறங்கினர். பகர் ஜமான் 2 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஹரிஸ் சோஹைல்
6 ரன்னிலும், முகமது ரிஸ்வான் 14 ரன்னிலும், ஆசிஃப் அலி 4 ரன்னிலும் வெளியேறினர். பின்னர்
151 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா சேஸிங்கை தொடங்கியது. டேவிட்
வார்னர் 20 ரன்னிலும், ஆரோன் பிஞ்ச் 17 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து களம் இறங்கிய ஆஸ்திரேலிய
அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தது. டேவிட் வார்னர் 20 ரன்களில் கிளன் போல்டு
ஆனார். கடந்த 5 இன்னிங்சில் முதல்முறையாக அவர் ஆட்டம் இழந்து இருக்கிறார். கேப்டன்
ஆரோன் பிஞ்ச் 17 ரன்னிலும், பென் மெக்டெர்மோட் 21 ரன்னிலும் வெளியேறினர். இதற்கு மத்தியில்
நங்கூரம் பாய்ச்சியது போல் நிலைகொண்டு விளையாடிய முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித் பாகிஸ்தானின்
பந்து வீச்சை சிதறடித்து தங்கள் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.
மற்றும் தனது 4-வது அரைசதத்தை கடந்த ஸ்டீவன் சுமித் 80 ரன்களுடனும் (51 பந்து, 11 பவுண்டரி,
ஒரு சிக்சர்), ஆஷ்டன் டர்னர் 8 ரன்னுடன் களத்தில் இருந்தனர். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில்
பாகிஸ்தான் தொடர்ச்சியாக சந்தித்த 5-வது தோல்வி இதுவாகும். 3-வது வீரராக களம் இறங்கிய
ஸ்மித் ஆட்டமிழக்காமல் 51 பந்தில் 80 ரன்கள் குவிக்க ஆஸ்திரேலியா 18.3 ஓவரில் 3 விக்கெட்
இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மற்றும் இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற
கணக்கில் முன்னிலை வகிக்கிறது. முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் ரத்தானது. மற்றும்
இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி பெர்த்தில் வருகிற 8-ந்தேதி
நடக்கிறது.
அதே சமயம் ஆஸ்திரேலியா தொடர்ச்சியாக
ருசித்த 6-வது வெற்றியாக இது பதிவானது.
Be the first to comment on "ஸ்மித் அதிரடி, 2-வது டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தானை சுலபகமாக வென்றது ஆஸ்திரேலியா"