சூர்யக்குமார் யாதவின் அதிரடி சதம் வீண், இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து அணி

www.indcricketnews.com-indian-cricket-news-100141

நாட்டிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற இந்திய அணி 2-0 என தொடரை வென்றுவிட்ட நிலையில், மூன்றாவது டி20 போட்டி நேற்று நாட்டிங்ஹாமில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி டாஸை வென்று பேட்டிங்கை தேர்வுசெய்தது.

அதன்படி இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜேசன் ராய்- ஜோஸ் பட்லர் ஜோடியில் கேப்டன் பட்லர் 18(9) ரன்களுக்கு ஆவேஷ் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்நிலையில் மறுமுனையில் மந்தமாக ஆடிய ஜேசன் ராய் 27(26) ரன்களுக்கு உம்ரான் மாலிக்கிடம் விக்கெட்டை பறிகொடுக்க, தொடர்ந்து களமிறங்கிய பிலிப் சால்ட்டும் வெறும் 8(6) ரன்னுக்கு நடையைக்கட்டினார்.

ஆனால் அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த டேவிட் மலான்-லியாம் லிவிங்ஸ்டன் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், மலான் அரைசதம் கடந்து அசத்தினார். இதில் தொடர்ந்து அடித்து ஆடிய மலான் 77(39) ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரவி பிஷ்னோய் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அதே ஓவரில் மொயின் அலி டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.

இறுதியில் களமிறங்கிய ஹாரி ப்ரூக் 19(9), கிறிஸ் ஜோர்டன் 11(3) ஆகியோர் ஆட்டமிழக்க, மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த லிவிங்ஸ்டன் 42(29) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்தில் இருந்தார். இதனால் 20 ஓவருக்கு இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில்  ரிஷப் பந்த் 1(5) ,ரோகித் ஷர்மா 11(12) ,விராட் கோலி 11(6) ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆடட்மிழந்ததால், இந்திய அணி 31 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

ஆனால் அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த சூர்யக்குமார் யாதவ்-ஷ்ரேயாஸ் ஐயர் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், சூர்யக்குமார் அரைசதம் விளாசி அசத்தினார். இதில் மறுமுனையில் ஷ்ரேயாஸ் ஐயர் 28(23) ரன்கள் எடுத்திருந்த நிலையில் டாப்ளி பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுக்க, தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சூர்யக்குமார் தனது முதல் சர்வதேச டி20 சதத்தை 48 பந்துகளில் விளாசி அசத்தினார்.

இந்நிலையில் தொடர்ந்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 6(7), ரவீந்திர ஜடேஜா 7(4), ஹர்ஷல் படேல் 5(6), ரவி பிஷ்னோய் 2(2) ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க, மறுமுனையில் 14 பவுண்டரி, 6 சிக்ஸர் விளாசிய சூர்ய்க்குமார் 117(55) ரன்கள் எடுத்தபோது மொயின் அலி பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார.

இதனால் 20 ஓவர்க்கு 9 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 198 ரன்களை மட்டுமே எடுத்து,17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆனாலும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி வென்றது.

Be the first to comment on "சூர்யக்குமார் யாதவின் அதிரடி சதம் வீண், இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து அணி"

Leave a comment

Your email address will not be published.


*