இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரோகித் ஷர்மா விலகியதால், இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

www.indcricketnews.com-indian-cricket-news-100185

எட்ஜ்பாஸ்டன்: கடந்தாண்டு கொரானா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இங்கிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது இன்று முதல் எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற 4 டெஸ்ட் போட்டிகளில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்க  முக்கிய காரணமே ரோகித் ஷர்மா தான்.

ஏனெனில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் அடித்தவர் அவர் தான். அதுமட்டுமின்றி இங்கிலாந்து களத்தை பற்றி நன்கு அறிந்து வைத்துள்ளவர். எனவே இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்ற தீவிரமாக தயாராகி வரும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மாவுக்கு கொரானா தொற்று உறுதியாகிவுள்ளது.

லெய்செஸ்டெர்ஷைர் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் போது ரோகித்-க்கு கொரானா பாதிப்பு ஏற்பட்டு தனிமைபடுத்தப்பட்டார். அதன் காரணமாகவே அந்த பயிற்சி ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸில் அவரால்  பங்கேற்று விளையாட முடியவில்லை.

இருப்பினும் இப்போட்டி நடைபெறுவதற்கு முன்பாக கொரானா பாதிப்பிலிருந்து ரோகித் மீண்டு வந்துவிடுவார் என்று அனைவராலும் நம்பட்ட நிலையில் ,கடந்த புதன்கிழமை இரவு மற்றும் வியாழக்கிழமை காலை நடத்தப்பட்ட பரிசோதனையில், ரோகித் இன்னும் கொரானா தொற்று பாதிப்பிலிருந்து மீளவில்லை என்பது உறுதியாகயுள்ளது. எனவே அவருக்கு பதிலாக யார் கேப்டன் என்பது குறிந்து விவாதம் நடைபெற்று வந்தது.

அதேபோல கே.எல்.ராகுலும் கடந்தாண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டார். ஆனால் வலது இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரும் இத்தொடரிலிருந்து முழுமையாக வெளியேறியதால்,கேப்டனாக ரிஷப் பந்த் தலைமை வகிப்பாரா என்ற கேள்வி எழுந்தது.

ஆனால் அவருடைய கேப்டன்ஸி கடந்த போட்டிகளில் திருப்தி அளிக்கும் வகைகளில் இல்லாததால், அவர் பக்குவமற்ற கேப்டனாக இருப்பதாகவும், டெஸ்ட் போட்டிகளில் கேப்டன்ஸி செய்யும் அளவிற்கு  தகுதியான கேப்டன் அவர் இல்லை   என்றும் கருத்துக்கள் நிலவுகின்றன.  எனவே யார் இந்த டெஸ்ட் போட்டியின் கேப்டன் என்ற கேள்வி இருந்து வந்தது.

இந்நிலையில் ரோகித் இப்போட்டியிலிருந்து விலகுவதாகவும், இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக ஃபாஸ்ட் பவுலர் என்ற சாதனையை படைத்துள்ள ஜஸ்ப்ரித் பும்ரா நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தங்களது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

இதன்மூலம் இந்திய அணியின் 36வது டெஸ்ட் கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி 1986ஆம் ஆண்டு டெஸ்ட் கேப்டனாக பதவி வகித்த கபில் தேவுக்கு அடுத்த படியாக இந்திய அணியை டெஸ்ட் கிரிக்கெட்டில் வழிநடத்தும் வேகப்பந்துவீச்சு கேப்டன் என்ற சாதனையை பும்ரா படைத்துள்ளார்.

இந்திய அணிக்கு நடப்பாண்டில் மட்டும் இது 6வது புதிய கேப்டனாகும்.மேலும் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து பலத்தரப்பு ரசிகர்கள் பும்ராவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் ,இது வாழ்நாளில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் என்று பும்ரா தெரிவித்துள்ளார்.

Be the first to comment on "இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரோகித் ஷர்மா விலகியதால், இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார்."

Leave a comment

Your email address will not be published.


*