டெல்லி: நடந்து முடிந்த ஐபிஎல் 15-வது சீசனின் பந்துவீச்சை பொறுத்தவரை முற்றிலும் இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கான சீசனாக அமைந்தது. ஏனெனில் இந்த சீசனில் பல நிறமைவாயந்த வேகப்பந்து வீச்சாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
இதில் உம்ரான் மாலிக், குல்தீப் சென், மோசின் கான் ஆகியோர் அதிவேகமாக பதந்துவீசக் கூடியவர்கள். குறிப்பாக 10 அணிகள் கொண்ட 2022 இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) எட்டாவது இடத்தைப் பிடித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய உம்ரான் மாலிக்கின் அதிவேகம் எதிரணி பேட்ஸ்மேன்களை அலறவிட்டது.
அதுமட்டுமின்றி 157 கிமீ வேகத்தில் உம்ரான் வீசிய பந்துதான்,ஃபைனலுக்கு முன்பு வரை சீசனின் அதிவேக பந்தாக இருந்தது. ஆனால் ஃபைனலில் லாக்கி ஃபெர்குசன் 157.3 கிமீ வேகத்தில் வீசி, உம்ரான் மாலிக்கை பின்னுக்குத்தள்ளினார்.இதனால் சீசனின் 2வது அதிவேக பந்துவீச்சாளராக உம்ரான் மாலிக் இடம்பிடித்தார்.
எனவே இதுவரை யாராலும் பதிவு செய்யப்படாத வேகமான பந்துவீச்சான சோயிப் அக்தரின் 2003 உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 161.3 கிமீ வேகத்தில் பதிவுசெய்திருந்த, அச்சாதனையை உம்ரானால் முறியடிக்க முடியும் என்ற கணிப்புகளைத் தூண்டியது.
இந்நிலையில் 150 கிமீ வேகத்திற்கு மேல் பந்துவீசி முன்னாள் வீரர்கள் பலரையும் கவர்ந்த 22 வயதான உம்ரான் மாலிக், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20ஐ தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.
இதனைத்தொடர்ந்து செய்தாளர்களை சந்தித்து பேசிய உம்ரான் மாலிக் ,”எவ்வாறாயினும், நடைபெறவிருக்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20ஐ தொடரில் இந்திய அணி வெற்றபெற உதவுவதில் மட்டுமே கவனம் செலுத்து வருகிறேன்” என்று தெரிவித்தார்.
மேலும் இதுகுறித்து கூறுகையில், “என் கவனம் இப்போது சோயிப் அக்தரின் சாதனையை முறியடிப்பதில் இல்லை. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் சரியான பகுதிகளில் பந்துவீசி, எனது நாடு வெற்றிபெற உதவுவதே என் நோக்கம். அதுமட்டுமின்றி எனது உடலையும் வலிமையையும் பராமரிக்க, தொடர்ந்து 150 கிமீ வேகத்துக்கு மேல் பந்துவீச விரும்புகிறேன்” என்று நியூஸ் 24 ஸ்போர்ட்ஸிடம் உம்ரான் மாலிக் தெரிவித்தார்.
தொடர்ந்து உம்ரான் தன்னுடைய நண்பர் அப்துல் சமத் குறித்து கூறுகையில், “என் வேகப்பந்துவீச்சுக்கு சமத் பெரும் பங்கு வகித்துள்ளார். நாங்கள் இருவரும்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.எங்கள் குழந்தை பருவத்திலிருந்தே ஒன்றாக பயிற்சி செய்து வருகின்றோம். அதுமட்டுமல்ல நாங்கள் இருவரும் ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடுகிறோம்”.எனக் கூறினார்.
மேலும் கூறுகையில், “அப்துல் என்னை மிகவும் ஊக்கப்படுத்தினார்.நான் பயிற்சியின்போது அவருக்கு எப்போது பந்துவீசினாலும், நான் மெதுவாக பந்து வீசுகிறேன் என்றே அவர் கூறுவார். அதனால், நான் அதிக வேகத்துடன் பந்துவீசுவேன்.பின்னர் ஜிம் மற்றும் முறையான உடற்பயிற்சியும் என் பந்துவீச்சுக்கு பெரிதளவில் தவியது” இவ்வாறு உம்ரான் செய்தியாளர்களிடம் கூறினார்.
Be the first to comment on "“தென்னாப்பிரிக்கவுக்கு எதிரான அனைத்து போட்டிகளிலும் எனது நாடு வெற்றிபெற உதவ விரும்புகிறேன்”- உம்ரான் மாலிக்."