டேவிட் வார்னர் அதிரடியில் சுருண்டது இலங்கை

மெல்போர்னில் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற கடைசி டி20 போட்டியிலும் இலங்கை அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா டி20 தொடரை 3-0 என்று கைப்பற்றி ஒயிட்வாஷ் சாதனை புரிந்துள்ளது.

நம்பர் 1 பாகிஸ்தானுக்கு ஒயிட்வாஷ் கொடுத்த இலங்கை இம்முறை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மடிந்து ஒயிட்வாஷ் வாங்கியது.

டாஸ் வென்ற ஆஸி. கேப்டன் பிஞ்ச் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்ய இலங்கை அணி மோசமாகத் தொடங்கி பிரேராவின் அரைசதத்துடன் 20 ஓவர்களில் 142/6 என்று முடிந்தது. ஸ்டார்க், கமின்ஸ், ரிச்சர்ட்சன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா, பிஞ்ச் (37) வார்னர் (57 நாட் அவுட்) மூலம் அதிரடி தொடக்கம் கண்டு 9வது ஓவரிலேயே 69 ரன்களை எட்டியது.

17.4 ஓவர்களில் 145/3 என்று வெற்றி பெற்றது, மலிங்கா, நுவான் பிரதீப், குமாரா ஆகியோர் தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர். பிஞ்ச் 25 பந்துகளில் 1 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 37 ரன்கள் விளாச வார்னர் 50 பந்துகளில் 4 பவுண்டரிகள் 1 சிக்சருட்ன 57 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். ஸ்டீவ் ஸ்மித் 13 ரன்களில் வெளியேறி ஏமாற்றமளித்தார்.

அந்த அணியின் பெரேரா அதிகபட்சமாக 57 ரன்கள் விளாசினார். ராஜபக்சே 17 ரன்களும், பெர்னாண்டோ 20 ரன்களும் சேர்த்தனர்.

பின்னர் 143 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா 2-வது பேட்டிங் செய்தது. வார்னர் ஆட்டமிழக்காமல் 50 பந்தில் 57 ரன்கள் விளாச 17.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் சேர்த்து அபார வெற்றி பெற்றது. ஆரோன் பிஞ்ச் 25 பந்தில் 37 ரன்கள் எடுத்தார்.

ஆஸி. பந்துவீச்சில் ஸ்டார்க், ரிச்சர்ட்சன், கம்மின்ஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 17.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 145 ரன் எடுத்து வென்றது. கேப்டன் பிஞ்ச் 37, ஸ்மித் 13, மெக்டெர்மாட் 5 ரன்னில் வெளியேறினர். வார்னர் 57 ரன் (50 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), டர்னர் 22 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.ஆஸி. அணி ஹாட்ரிக் வெற்றியுடன் 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றியது. வார்னர் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை தட்டிச் சென்றார்.முதல் இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றிருந்ததால் இலங்கை அணியை 3-0 என ஒயிட்வாஷ் செய்தது.

Be the first to comment on "டேவிட் வார்னர் அதிரடியில் சுருண்டது இலங்கை"

Leave a comment

Your email address will not be published.


*