ஆஸ்திரேலியா அணி வெற்றி : 2-வது 20 ஓவர் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னரின் அரை சதம்

இதில் ‘டாஸ்’ வென்ற இலங்கை அணி கேப்டன் லசித் மலிங்கா, முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியில் மிட்சல் ஸ்டார்க்கிற்கு பதிலாக ஸ்டான்லெக் அணியில் இடம் பெற்றார். இலங்கை அணியை பொறுத்தவரையில், ராஜபக்‌ஷா, பெர்ணாண்டோ, கசும் ராஜிதா ஆகியோருக்கு பதிலாக அவிஸ்கா பெர்ணாண்டோ, நிரோஷன் டிக்வெலா, இஸ்ரூ உதானா அணியில் சேர்க்கப்பட்டனர்.

இலங்கை அணிக்கெதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னரின் அரை சதத்தால் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வார்னர், பிஞ்ச் களமிறங்கினர். இலங்கை அணியின் கேப்டன் மலிங்கா வீசிய முதல் ஓவரின் 3-வது பந்தில் பிஞ்ச் டக் அவுட்டில் வெளியேறினார். அடுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித், வார்னர் ஜோடி அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தனர்.

இந்நிலையில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 19 ஓவரில் 117 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்குகிறது.

ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வார்னர், பிஞ்ச் களமிறங்கினர். இலங்கை அணியின் கேப்டன் மலிங்கா வீசிய முதல் ஓவரின் 3-வது பந்தில் பிஞ்ச் டக் அவுட்டில் வெளியேறினார். அடுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித், வார்னர் ஜோடி அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தனர்.

ஆஸ்திரேலியா அணி 13 ஓவரில் 118 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்டீவ் ஸ்மித் 36 பந்துகளில் 56 (6 பவுண்டரி) ரன்களும் டேவிட் வார்னர் 41 பந்துகளில் (9 பவுண்டரி) 60 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆட்டநாயகனாக டேவிட் வார்னர் தேர்வு செய்யப்பட்டார்.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவரை தொடரை ஆஸ்திரேலியா அணி 2-0 என கைப்பற்றியது. 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி மெல்போர்னில் நவம்பர் 1-ம் தேதி நடைபெறுகிறது.

இத்தொடரில் இரண்டு போட்டியிலும் பேட்டிங் செய்த இலங்கை அணி (99/9, மற்றும் 117) என மொத்தமாக 216 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் போட்டியில் அடித்த 233 ரன்கள் என்ற ஸ்கோரை கூட எட்டாமல் படுகேவலமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது.

Be the first to comment on "ஆஸ்திரேலியா அணி வெற்றி : 2-வது 20 ஓவர் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னரின் அரை சதம்"

Leave a comment

Your email address will not be published.


*