ஐபிஎல் 2022: குல்தீப் சென் கைபற்றிய நான்கு விக்கெட்டுகளால் ராஜஸ்தான் ராயல்ஸின் அபார வெற்றிக்கு வழிவகுத்தது.

www.indcricketnews.com-indian-cricket-news-0094

மும்பை: ஐபிஎல் தொடரின் 39ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் புனேவில் உள்ள எம்சிஏ மைதானத்தில் நேற்று பலப்பரீட்சை நடத்தன. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.

அதன்படி பேட்டிங்செய்ய களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரரான தேவதத் படிக்கல்  7(7) ரன்களுடனும், அடுத்துவந்து அடித்து விளையாடிய அஷ்வின் 4 பவுண்டரி உட்பட 17(9) ரன்களுடனும் முகமது சிராஜ் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆடட்மிழந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இதனைத்தொடர்ந்து நடப்பு சீசனில் நல்ல ஃபார்மில் இருக்கும் ஜோஸ் பட்லரை 8(9) ரன்களில் ஹேசில்வுட் வீழத்த, அதன்பின்னர் களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடி ஆர்சிபி பந்துவீச்சாளர்களை திணறடித்தார். இருப்பினும் 1 பவுண்டரி,3 சிக்ஸர்களை விளாசிய சாம்சன் 27(21) ரன்களுடன் ஹசரங்கா பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து வந்த  மிட்செல் 16(24) ரன்களில் ஹேசில்வுட் பந்துவீச்சில் நடையைக்கட்டினார்.

இறுதியில் ஹெட்மயர் 3(7),போல்ட் 5(7),பிரசித் கிருஷ்ணா 2(5) ஆகியோர் அடுத்தடுத்து வந்து ரன் எடுக்க தடுமாறிய நிலையில், மறுமுனையில் ரியான் பராக் மட்டும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து 3 பவுண்டரி,4 சிக்ஸர் உட்பட 56(31) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இதனால் ராஜஸ்தான் அணி 20 ஓவருக்கு 8 விக்கெட் இழந்து 144 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து எளிய இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரரான விராட் கோலி வழக்கம்போல விளையாடி 9(10) ரன்களில் பிரசித் கருஷ்ணா பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

மறுமுனையில் அதிரடியாக விளையாட முற்பட்ட டூ பிளெசிஸ் 3 பவுண்டரி,1 சிக்ஸர் என 23(21) ரன்களில் குல்தீப் சென் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, தொடர்ந்துவந்த மேக்ஸ்வெல் அடுத்த பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி வந்த வேகத்தில் நடையைக் கட்டினார். இதனால் ஆர்சிபி அணி 37 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது.

அதன் பின்னர் களமிறங்கிய வீரர்களான ராஜத் படிதர் 16(16) , பிரபுதேசாய் 2(7) , ஷாபஸ் அகமது 17(27) ஆகியோர்  பெரிய ஸ்கோர் அடிக்க முடியாமல் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இதற்கிடையே களமிறங்கிய தினேஷ் கார்த்திக் சிறந்த பினிஷராக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 6(4) ரன்களின் போது ரன் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.

இறுதியில் அதிரடியாக விளையாட முற்பட்ட ஹசரங்கா 18(13) ரன்களுடனும், அடுத்து வந்த ஹர்ஷர் படேல் 8(11) ரன்களுடனும் குல்தீப் சென் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த முகமது சிராஜ் 5(5) ரன்களுடன் ரன் அவுட்டாகி வெளியேறினார்.

இதனால் பெங்களூர் அணி 19.3 ஓவரிலேயே 115 ரனகளுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் ராஜஸ்தான் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது.

Be the first to comment on "ஐபிஎல் 2022: குல்தீப் சென் கைபற்றிய நான்கு விக்கெட்டுகளால் ராஜஸ்தான் ராயல்ஸின் அபார வெற்றிக்கு வழிவகுத்தது."

Leave a comment

Your email address will not be published.


*