மும்பை:ஐபிஎல் தொடரின் 14வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் நேற்று புனேவில் பலப்பரிட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. இதனைத்தொடர்ந்து பேட்டிங் செய்ய களமிறங்கிய மும்பை அணியின் தொட்க்க ஆட்டக்காரர்களான கேப்டன் ரோகித் ஷர்மா – இஷான் கிஷன் ஜோடியில் ரோகித் 3(12) ரன்கள் எடுத்தபோது உமேஷ் யாதவ் பந்துவீச்சில் அவுட்டாகி அதிர்ச்சியளிக்க, மறுமுனையில் 1 பவுண்டரி மட்டுமே விளாசிய இஷான் கிஷன் 14(21) ரன்கள் எடுத்து பாட் கம்மின்ஸ் பந்துவீச்சில் நடையைக் கட்டினார்.
அடுத்துவந்து களமிறங்கி ஓரளவுக்கு தாக்குப்பிடித்த குட்டி டிவிலியர்ஸ் டிவோல்ட் பிரேவிஸ் 2 பவுண்டரி,2 சிக்ஸர் உட்பட 29(19) ரன்கள் எடுத்து வருண் சக்ரவர்த்தி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்நிலையில் அணியை காப்பாற்ற பார்ட்னர்ஷிப் அமைத்த சூர்யக்குமார் யாதவ்- திலக் வர்மா ஜோடி சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். இருப்பினும் அரைசதம் விளாசிய சூர்யக்குமார் 5 பவுண்டரி, 2 சிக்ஸர் உட்பட 52(36) ரன்கள் எடுத்தபோது பாட் கம்மின்ஸ் பந்துவீச்சால் ஆட்டமிழந்தார்.
ஆனால் அவருக்கு துணையாக களமிறங்கிய திலக் வர்மா 3 பவுண்டரி, 2 சிக்ஸர் உட்பட 38(27) ரன்களுடனும், அடுத்துவந்த பொல்லார்ட் கம்மின்ஸ் 3 சிக்ஸர் உட்பட 22(5) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்திலிருந்தனர். இதனால் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 162 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரரான அஜிங்கிய ரஹானே 7(11) ,ஷ்ரேயஸ் ஐயர் 10(6), சாம் பில்லிங்ஸ் 17(12), ராணா 8(7), ஆண்ட்ரே ரஸல் 11(5) என அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர்.
இந்நிலையில் மறுமுனையில் தூண் போன்று நின்று நிதானமாக விளையாடிவந்த தொடக்கவீரர் வெங்கடேஷ் ஐயர் உடன் பாட் கம்மின்ஸ் பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை குவித்தார். இருப்பினும் வெற்றியடைய கடைசி 5 ஓவர்களில் 47 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது பாட் கம்மின்ஸ் 15வது ஓவரில் 12 ரன்களும், 16வது ஓவரில் 6 சிக்ஸர்களையும், ஒரு பவுண்டரியையும் பறக்கவிட்டு 35 ரன்களும் எடுத்து அசத்தனார்.
இதனால் கொல்கத்தா அணி 16 ஓவருக்கு 5 விக்கெட் இழந்து 162 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இதில் அரைசதம் விளாசிய வெங்கடேஷ் ஐயர் 6 பவுண்டரி, 1 சிக்ஸர் உட்பட 50(41) ரன்களுடனும், 4 பவுண்டரி,6 சிக்ஸர் உட்பட அரைசதம் விளாசிய பாட் கம்மின்ஸ் 15 பந்துகளில் 56 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
Be the first to comment on "ஐபிஎல் 2022: பேட் கம்மின்ஸ் தனது சக்ஸர் மழையால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஒரு மறக்கமுடியாத வெற்றியை பெற்றுத் தந்தார்."