ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய விருப்பமான நட்சத்திரப் பந்துவீச்சாளர் தீபக் சாஹர் போட்டியின் பெரும்பகுதியில் பங்கேற்கமுடியாததால், சிஎஸ்கே பெரும் அடியை சந்தித்துள்ளது.இந்நிலையில் வருகின்ற மார்ச் 26ஆம் தேதி கேகேஆர்-க்கு எதிராக சிஎஸ்கே விளையாட தயாராகி வருகிறது.
இதில், சிஎஸ்கே-வின் பலம்: நான்குமுறை ஐபிஎல் பட்டத்தை வென்ற சிஎஸ்கே இடதுகை மற்றும் வலதுகை பேட்டர்களுக்கு நியாயமான வகையில் பேட்டிங் வரிசையை வடிவமைக்கவும், மேட்ச்-அப்களைச் சமாளிக்கவும் வாய்ப்பளித்துள்ளது. மேலும் ஆடம் மில்னே மற்றும் இந்தியாவின் U-19 உலகக்கோப்பை நட்சத்திரம் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் என இரண்டு எக்ஸ்பிரஸ் வேகப்பந்துவீச்சாளர்களையும், ஜடேஜா மற்றும் மொயீன் அலி என இரண்டு மிடில் ஓவர் சுழற்பந்துவீச்சாளர்களையும் சிஎஸ்கே கொண்டுள்ளது.
சிஎஸ்கே-வின் பலவீனம்: ஒரு நல்லதொடக்க ஜோடியின் பின்னணியில் உள்ள முக்கிய காரணங்களில் ஒன்று, ஒருவருக்கொருவர் பூர்த்தி செய்வதுதான்.அந்தவகையில் கேகேஆர்- காக அற்புதங்களைச் செய்த லின்-நரேன் ஜோடியை போல, சென்னை அணிக்கு ஃபாஃப் டு பிளெசிஸ் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருந்தனர்.ஆனால் தற்போது ஃபாஃப் பதிலாக கான்வே, கெய்க்வாட் உடன் இணையவுள்ளார்.
கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களில், ஃபாஃப்-ன் பவர்பிளே ஸ்ட்ரைக் ரேட் 136.4 ஆகும் .ஆனால் முதல் ஐபிஎல் சீசனில் விளையாடும் கான்வேயின் பவர்பிளே ஸ்ட்ரைக் ரேட் 122 மட்டுமே உள்ளது.அதுமட்டுமின்றி இவருக்கு இந்தியாவில் டி20 போட்டிகளில் விளையாடிய அனுபவமும் இல்லை.
மேலும் சாஹரின் காயம் மற்றும் ஏப்ரல் நடுப்பகுதி வரை இல்லாதது சிஎஸ்கே-இல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.ஏனெனில் 2019 முதல், பவர்பிளேயில் சாஹர் 32 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.அதுமட்டுமின்றி தோனி அவரை 46 போட்டிகளில், 35 முறை பவர்பிளேயில் மூன்று ஓவர்கள் வீசவைத்துள்ளார்.
சிஎஸ்கே-வின் வாய்ப்பு: சாஹரை தவறவிட்டதால்,சிஎஸ்கேவின் விருப்பங்களில் ஒன்று ஹங்கர்கேகராக இருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் U-19 உலகக்கோப்பையில், அவரது ஈர்க்கக்கூடிய சீம்-பவுலிங் மற்றும் கடினமான பேட்டிங் திறமை அபாரமானவை. மகாராஷ்டிரா ரஞ்சி டிராபி அணியில் இடம் பெறவில்லை என்றாலும், மூன்று அணிகளின் ஏலப் போருக்குப் பிறகு சிஎஸ்கே அவரை 1.5கோடி ரூபாய்க்கு வாங்கியது.
அச்சுறுத்தல் பகுப்பாய்வு: சிஎஸ்கே-வில் சாஹர் இல்லாதது பவர்பிளே பந்துவீச்சைப் பாதிக்காது. ஆனால் வேகத்தாக்குதலை அச்சுறுத்தும் தன்மையைக் குறைக்கும். சாஹர்க்கு பதிலாக துஷார் , ஆசிஃப் அல்லது முகேஷ் ஆகியோரை வேகப்பந்துவீச்சாளராக மாற்றினால், அது அவர்களின் வேகத்தாக்குதலின் தரத்தை குறைத்து, மில்னே மற்றும் பிராவோ மீது அதிக நம்பிக்கை வைக்கும்.
இதுவே கிறிஸ் ஜோர்டானைத் தேர்வுசெய்தால், அது அவர்களின் பேட்டிங்கின் ஆழத்தைத் தக்கவைத்து, அவர்களின் டெத் பவுலிங்கை வலுப்படுத்தும். எனவே கான்வேக்குப் பதிலாக கெய்க்வாட் உடன் ராபின் உத்தப்பாவை டாப்ஆர்டரில் பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும்.