நியூடெல்லி: இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியதை தொடர்ந்து, வரும் மார்ச் 4ஆம் தேதி முதல் இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா விளையாடவுள்ளது. இதில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா முதன்முதலில் பொறுப்பேற்று விளையாடவுள்ளார். மேலும் இந்தியாவின் மிடில்ஆர்டருக்கு ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தும் வகையில், முன்னாள் வீரர்களான சேதேஷ்வர் புஜாரா மற்றும் அஜிங்க்யா ரஹானேக்கு நீண்டகால மாற்றாக ஷுப்மான் கில் மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோர் களமிறங்கவுள்ளனர்.
கேப்டவுனில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து இந்திய அணியில் இரண்டு இடங்கள் காலியான நிலையில், இலங்கை மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில், ரஹானே மற்றும் புஜாரா அழைக்கப்படமாட்டார்கள் என்பது இப்போது தெளிவாகிறது. இந்நிலையில், ஷுப்மான் ,விஹாரி மற்றும் ஸ்ரேயாஸ் தங்களுக்கான சொந்த இடங்களை உருவாக்க தயாராகி வரும் நிலையில், வரும் மார்ச் 4ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கும் டெஸ்ட் போட்டியில், ரோஹித் ஷர்மா மற்றும் மயங்க் அகர்வாலுக்கு அடுத்தபடியாக மூன்றாவது வீரராக ஷுப்மான் கில் களமிறங்க அதிக வாய்ப்புள்ளது.
மேலும் இதுகுறித்து முன்னாள் தேசிய தேர்வாளரும் டெஸ்ட் தொடக்க வீரருமான தேவாங் காந்தி கூறுகையில், “இந்திய அணியில் மூன்றாவது வரிசையில் களமிறங்க ஷுப்மான் சிறந்ததேர்வு என்று நான் நம்புகிறேன். அணியின் ஓப்பனராகவே களமிறங்கும் திறமை அவரிடமுள்ளது. ஆனால் ரோஹித்துடன் மயங்க் இருப்பதால் ,முதல் மூன்று வரிசையில் ஷுப்மான் கில்லை களமிறக்கலாம்.மேலும், இந்தியா ஏ அமைப்பில் ஷுப்மானை கண்காணிக்கும் போது, வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிராக மிடில்ஆர்டரில் இரட்டை சதம் அடித்திருந்தார்.
ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருப்பதால், மூன்றாவது வீரராக களமிறங்கி திறமையுடன் செயல்பட்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்.” என்று நம்புவதாக காந்தி கூறினார். மேலும் விஹாரி குறித்து கூறுகையில், “புதியபந்தை மழுங்கடிக்கும் புஜாராவின் உத்திக்கு நெருக்கமான விஹாரி போன்ற ஒரு வீரரை மூன்றாவது வீரராக பயன்படுத்தலாம். ஆனால், விஹாரி ஒரேயொரு டெஸ்டில் மட்டுமே சொந்த மண்ணில் விளையாடியுள்ளார்.
ஆனால் எல்லோருக்கும் மேலாக நியாயமான ரன் எடுக்கத் தகுதியானவர். இரண்டாவதாக, இந்தியா மற்றும் இந்தியா ஏ அணிகளைப் பொறுத்தவரை, வெளிநாட்டில் 5வது இடத்தில் விஹாரி பேட்டிங் செய்துள்ளார், ரஞ்சி டிராபியில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அற்புதமான சாதனை படைத்துள்ளார்.” என்று தெரிவித்தார்.
கில் மற்றும் விஹாரி இருவரும் இதற்குமுன் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடியிருப்பதால், தற்போது ரோஹித் மற்றும் டிராவிட்டின் முதல் தேர்வு ஸ்ரேயாஸ் அல்ல. ஆனால் இவர்கள் இருவரில் யாரேனும் தகுதியற்றவர்கள் இல்லை எனும் நிலைவந்தால், அடுத்த தேர்வு நிச்சயமாக ஸ்ரேயாஸ் ஐயராக இருப்பார்” இவ்வாறு பிடிஐயிடம் காந்தி தெரிவித்தார்.