இந்திய அணிக்கு கேப்டனாக வாய்ப்பு கிடைத்தால், அது கௌரவமாக இருக்கும் என ஜஸ்பிரித் பும்ரா கூறியுள்ளார்.

www.indcricketnews.com-indian-cricket-news-059

பார்ல் (தென்னாப்பிரிக்கா): தென்னாப்பிரிக்காவுக்கு  எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என இந்திய அணி தோல்வியடைந்தது. ஆகையால் முதல்முறையாக தென்னாப்பிரிக்க மண்ணில்  டெஸ்ட் தொடரை வென்றோம் என்ற புதிய வரலாறை படைக்க முடியாமல் இந்திய அணி ஏமாற்றம் அடைந்துள்ளது.

இதனைதொடர்ந்து இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி, தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இது அனைத்து விதமான கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைதொடர்ந்து, பிசிசிஐ டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனை நியமிக்க வேண்டிய கட்டாயத்தில்  இருக்கிறது.

கோலியைப் போல் பணிச்சுமை காரணமாக ரோகித் ஷர்மாவும் பேட்டிங்கில் சொதப்பிவிடுவாரோ என்ற பயத்தில் பிசிசிஐ இருப்பதால், வேறு ஒருவருக்கு அந்த பதவியை கொடுப்பது பற்றி பிசிசிஐ நிர்வாகிகள் ஆலோசித்து வருகின்றனர்.ஆகையால் ரோகித் ஷர்மா தான் டெஸ்ட் கேப்டன் என்பது இன்னும் உறுதியாகவில்லை.

இந்நிலையில், வரும் புதன்கிழமை தொடங்கவிருக்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பரீத் பும்ராவிடம், உங்களுக்கு டெஸ்ட் அணிக் கேப்டன் பதவியை கொடுத்தால் ஏற்பீர்களா? எனப் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டி கொடுக்கப்பட்டபோது கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த பும்ரா, “எதிர்காலத்தில் அப்படியொரு வாய்ப்பு எனது கதவைத் தட்டினால் இந்திய அணியை வழிநடத்த தயங்கமாட்டேன்.அப்பதவியை எனக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவமாகத்தான் பார்ப்பேன். எந்தவொரு இந்திய வீரரும் இந்த பதவியை வேண்டாம் எனக் கூறமாட்டார். ஒரு பதவி இருக்கிறதா இல்லையா என்பதைவிட  இந்திய அணிக்காக நிறைய பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை.ஆதலால் என்னால் முடிந்த அனைத்தையும் நிச்சயம் அணிக்காக செய்வேன்.

மற்ற சகவீரர்களிடம் பேசி, அவர்களது முழுத்திறமையை வெளி கொண்டுவருவதுதான் என்னுடைய பழக்கம். அதனை இப்போது மட்டுமல்ல எப்போதும் செய்து வருகிறேன். சூழ்நிலைக்கு ஏற்றவாற எனது அணுகுமுறை இருக்கும்” எனக் கூறினார். மேலும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் அணிக்கு துணைக் கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட நீங்கள் எவ்வாறு செயல்படுவீர்கள் எனக் கேள்வி எழுப்பப்பட்டது,

அதற்கு பதிலளித்த பும்ரா,“துணைக் கேப்டனாக எனது பணியை மிகச்சிறப்பாக செய்வேன்.  இளம் வீரர்களிடமிருந்து சிறந்த பங்களிப்பை வாங்க முயற்சிப்பேன். பந்துவீசும்போது, எப்படி பீல்டிங் செட் செய்ய வேண்டும் என்பது குறித்து பௌலர்களிடம் கேட்டு அறிந்து கொண்டு கேப்டன் கே எல் ராகுலுடன் கலந்து ஆலோசிப்பேன்.மேலும் அவருக்கு உதவி தேவைப்பட்டால் உதவுவேன் .

நான் துணை கேப்டனாக இல்லாதபோதிலும், சில இளைய தோழர்களுடன் பேசி, எந்த வகையான துறைகளை அமைக்க வேண்டும் என்பது பற்றி நிறைய விவாதித்துள்ளேன்.இதனால், எனக்கு எந்தவொரு அழுத்தமும் ஏற்பட வாய்ப்பில்லை. ” இவ்வாறு அவர் பத்திரிக்கையாளருக்கு தெரிவித்தார்.