செஞ்சூரியன்: இந்தியா-தென்னாப்பிரிக்கவுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் நடைபெற்று வருகிறது. இதில்,முதல் இன்னிங்ஸ் முடிவில் 10 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 327 ரன்களும் , தென்னாப்பிரிக்கா அணி 197 ரன்களும் சேர்த்தது.
இதையடுத்து, 130 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 16 ரன்கள் எடுத்த நிலையில் மூன்றாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதில், கே. எல். ராகுல் 5(19) -ஷர்தூல் தாகூர் ஜோடி4(5) ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில், நான்காவது நாளான நேற்று களமிறங்கிய ஷர்தூல் தாகூர் – கே. எல். ராகுல் ஜோடியில் ஷர்தூல் தாகூர் 10 (26) ரன்களும் ,கே.எல்.ராகுல் 4 பவுண்டரி உட்பட 23 (74) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலி 18(31)- புஜாரா 12 (52) ஜோடி களத்தில் இருக்கும் நிலையில்,நான்காவது நாள் முதல் செஷன் முடிவுக்கு வந்தது.இதில்,இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்து, 209 ரன்கள் முன்னிலை பெற்றது.
மேலும்,இரண்டாவது செஷன் நேற்று துவங்கிய நிலையில், முதல் பந்தை கவர் டிரைவ் அடிக்க முற்பட்ட கோஹ்லி, விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.தொடர்ந்து களமிறங்கிய புஜாரா 3 பவுண்டரி உட்பட 16 (64) ரன்களும், ரஹானே 3 பவுண்டரி 1 சிக்ஸர் உட்பட 20 (23) ரன்களும், விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 6 பவுண்டரி உட்பட 34 (34) ரன்களும், ரவிச்சந்திரன் அஸ்வின் 2 பவுண்டரி உட்பட 14 (17) ரன்களும் எடுத்து வந்த வேகத்தில் ஆட்டமிழந்து நடையைக் கட்டினர். இதனால், இந்திய அணி 50 ஓவருக்கு 10 விக்கெட் இழந்து 174 ரன்கள் எடுத்தது.
இதில், காகிசோ ரபாடா 4 விக்கெட்டுகளையும், மார்கோ யான்சன் 4 விக்கெட்டுகளையும்,லுங்கி நெகிடி 2 விக்கெட்களையும் எடுத்தனர். மேலும்,305 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கியுள்ள தென்னிப்பிரிக்க அணியில் எய்டன் மார்க்கரம் 1 (7) ரன்னும், கீகன் பீட்டர்சன் 3 பவுண்டரி உட்பட 17 (36) ரன்களும், வான்டீர் துஷன் 11 (65)ரன்களும் , கேசவ் மகாராஜ் 8 (19)ரன்களும் எடுத்து ஆட்டமிழந்துள்ளனர்.
இதில், கேப்டன் டீன் எல்கர் 7 பவுண்டரி உட்பட 52 (122) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். தற்போது, நான்காவது நாள் ஆட்டம் முடிவடைந்துள்ள நிலையில், 40 ஓவருக்கு, தென்னாப்பிரிக்கா 4 விக்கெட் இழந்து 94 ரன்கள் சேர்த்துள்ளது. இதில், ஷமி மற்றும் சிராஜ் தலா ஒரு விக்கெட்டையும், பும்ரா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
நாளை ஒருநாள் போட்டி மீதமுள்ள நிலையில், இந்திய அணி வெற்றிபெற 6 விக்கெட்டுகளையும் கைப்பற்றியே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.