மும்பை: இந்திய-நியூசிலாந்துக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என இந்திய அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரஹானே 35 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதனால், இனிவரும் போட்டிகளில் அவர் இந்திய அணியில் இடம்பெறுவாரா என்ற கேள்வி வழுத்துள்ளது.
இந்நிலையில், இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு சென்று 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில், முதல்டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 26ம் தேதி செஞ்சூரியனில் தொடங்கவிருக்கிறது.
மேலும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் விளையாடவிருக்கும் இந்திய அணியின் லெவன் காம்பினேஷனை தேர்வு செய்துள்ள முன்னாள் வீரரான விவிஎஸ் லக்ஷ்மண் இதுகுறித்து தனியார் நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், நன்றாக விளையாடும் வீரர்களுக்கு வாய்ப்பளிப்பது அவசியம். வீரர்களின் தேர்வின்போது தொடர்ச்சி மிகமுக்கியம். அந்தவகையில், நியூசிலாந்துக்கு எதிராக சிறப்பாக விளையாடிய மயன்க் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவருக்கும் வாய்ப்பளித்து கண்டிப்பாக ஆடவைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ரஹானேவின் பேட்டிங் குறித்து பேசிய லக்ஷ்மண்,”ரஹானேவின் ஃபார்ம் சரியாக இல்லாதது பிறரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதில், பழக்கமான இந்தியமைதானத்தில் கூட ரன்கள் எடுக்க முடியாமல் திணறுவதால் வேறொரு வீரரை பரீசிலிக்க வேண்டிய நிலைக்கு நிர்வாகம் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
என்றாலும், தலைமை பயிற்சியாளரும் கேப்டனும் அனுபவம் வாயந்தவரே அணியில் தொடரட்டும் என ஆதரித்து வருகின்றனர். இருப்பினும், நாம் முடிவெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. என்னைப் பொறுத்தவரை, ரஹானேவை டெஸ்ட் தொடரின் முதல்போட்டியில் பிலேயிங் லெவனில் சேர்க்க முடியாது.
அதற்கு பதிலாக, இந்திய – நியூசிலாந்துக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் முதல்போட்டியில் சதமும் இரண்டாவது போட்டியில் அரைசதமும் எடுத்து அனைவரிடத்திலும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ள தற்போதைய அறிமுக வீரரான ஸ்ரேயாஸ் ஐயரை களத்தில் இறக்கலாம் என தனது வீயூகத்தை தெரிவித்துள்ளார். தொடர்ந்து பல போட்டிகளில் விளையாடி நல்ல ஃபார்மில்லுள்ள அவருக்கு அதேதொடர்ச்சியை வழங்கி நம்பிக்கையை ஏற்படுத்தவேண்டும் .நான் நிச்சயம் அந்த வாய்ப்பை வழங்குவேன்” இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல, ரவிந்திரா ஜடேஜா குறித்து கருத்து தெரிவித்துள்ள லக்ஷ்மண், “ஆல்ரௌண்டரான ஜடேஜா தனது சிறப்பான ஆட்டத்தை பல போட்டிகளில் நிரூப்பித்துள்ளார். மேலும், அவருடைய பேட்டிங் திறமையை உள்நாட்டு போட்டிகளில் மட்டுமல்ல வெளிநாட்டு போட்டிகளிலும் அவ்வளவு எளிதில் எடுத்துக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், முதலில் 5 பேட்ஸ்மேன்களுடன் களமிறங்கும் இந்திய அணியில் 6வது வீரராக விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட்-ம் 7வதாக ஆல்ரவுண்டர் ஜடேஜாவும் அதை தொடர்ந்து 3 ஃபாஸ்ட் பௌலர்கள் மற்றும் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வினும் என இந்த வரிசையில் இந்திய அணி விளையாடினால் சிறப்பாக இருக்கும்” இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
Be the first to comment on "இந்திய- தென்னாப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் அஜிங்கியா ரஹானே விளையாட முடியாது என விவிஎஸ் லக்ஷ்மண் தெரிவித்துள்ளார்"