நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி கடைசி நேரத்தில் வெளிச்சம் காரணமாக டிராவில் முடிந்தது.

www.indcricketnews.com-indian-cricket-news-0109

கான்பூர்: இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி முதல் இன்னங்சில் 345 ரன்கள்  குவித்தது. இதைதொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து 296 ரன்கள் அடித்து 49  ரன்கள் பின்தங்கியது. இந்நிலையில், இரண்டாம் இன்னிங்சை 81வது ஓவரில் 7 விக்கெட் இழந்த நிலையில் 234 ரன்களுக்கு டிக்லர் செய்தது இந்திய அணி. 

இதை தொடர்ந்து, 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் களமிறங்கிய நியூசிலாந்தின் வில் யங்(2) ரன்களுடன் வெளியேறி,1 விக்கெட் இழப்பிற்கு 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில்  280 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் 5ம் நாளான நேற்று களமிறங்கிய நியூசிலாந்தின் ஆரம்ப பேட்ஸ்மேன்கள் டாம் லாதம் 3 பவுண்டரி உட்பட 52(136), வில்லியம் சோமர்வில்லே 5 பவுண்டரி உட்பட 36(110)ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடி அசத்தினார்.

பின்னர் களமிறங்கிய கேப்டன் வில்லியம்சன் 24(112),ராஸ் டெய்லர் 2(24), ஹென்றி நிகோலஸ் 1(4),விக்கெட் கீப்பர் டாம் பிலிந்தர் 2(38),கைல் ஜெமிசன் 5(30) மற்றும் டீம் சௌதீ 4(8) ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.  நியூசிலாந்தின் கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அஜஸ் பட்டேல்- ரவீந்திரா  போட்டியை டிரா செய்யும் முனைப்பில் இந்திய பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டனர்.

பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ஜடேஜா, அக்சர் என மாறி மாறி பந்து வீசியும் இந்த ஜோடியை  கடைசிவரை பிரிக்க முடியவில்லை. இந்திய அணி தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளும், ஜடேஜா 4 விக்கெட்டுகளும், அக்சர் மற்றும் உமேஷ்  தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இறுதியில், நியூசிலாந்து 98 ஓவரில் 165/9 என தாக்குப் பிடித்திருந்த நிலையில்  போதிய வெளிச்சம் இல்லாமல் போட்டி நிறுத்தப்பட்டு முதல்போட்டி சமனில் முடிவடைந்தது  என்று அறிவிக்கப்பட்டது.

4 வருடங்களுக்கு பிறகு, இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டி ஒன்றை எதிரணி டிரா செய்துள்ளது என்றால் அது நியூசிலாந்து அணி மட்டுமே. கடைசி ஒரு விக்கெட் எடுத்தால் வெற்றி என்ற நிலையில்  இந்திய அணிக்கு நியூசிலாந்து அணியின்  ரவீந்திரா 18(91) மற்றும் அஜஸ் பட்டேல் 2(23) இருவரும் ஆட்டமிழக்காமல் இருந்து ஏமாற்றத்தை அளித்து டிரா ஆனதற்கு முக்கிய காரணம் வகிக்கின்றனர்.  

போட்டி தொடங்கிய முதல் நாளிலிருந்தே ஆட்ட நேரம் முடியும் முன்பே, போதிய வெளிச்சம் இல்லாமல் போட்டி நிறுத்தப்பட்டது.  5ஆம் நாளான  நேற்றும் அதே காரணத்தினால் போட்டி கடைசியில் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில், வரும் டிசம்பர் 3-ந் தேதி 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பையில் தொடங்கவிருக்கிறது.  

Be the first to comment on "நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி கடைசி நேரத்தில் வெளிச்சம் காரணமாக டிராவில் முடிந்தது."

Leave a comment

Your email address will not be published.


*