3rd ODI: பௌலர்களை நடுங்க வைத்த சாம் கரன்: தொடரைக் கைப்பற்றியது இந்தியா!

India vs England 3rd ODI India beat England by 7 runs in nail-biter clinch series 2-1
India vs England 3rd ODI India beat England by 7 runs in nail-biter clinch series 2-1

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது.

துவக்க வீரர்களாக ரோஹித் ஷர்மா, ஷிகர் தவன் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் நிலைத்து நின்று விளையாடியதால் இந்த பார்ட்னர்ஷிப் 100 ரன்களை கடந்தது. ஷிகர் தவன் 56 பந்துகளில் 67 ரன்கள் குவித்தார். ரோஹித் ஷர்மா வெறும் 37 ரன்கள் மட்டும் சேர்த்து பெவிலியன் திரும்பியதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

அடுத்து கே.எல்.ராகுலும் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால், இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனை சமாளிக்கும் வகையில் ரிஷப் பந்த், ஹார்திக் பாண்டியா இருவரும் விளையாடினர். பந்த் 62 பந்துகளில் 78 ரன்கள் சேர்த்தார். ஹார்திக் 64 (44) ரன்கள் விளாசினார். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் ஏற்றம் கண்டது. இறுதில் ஷார்துல் தாகூர் 21 பந்துகளில் 30 ரன்கள் பறக்கவிட்டார். மற்றவர்கள் சிறப்பாக சோபிக்கவில்லை. இறுதியில் இந்திய அணி 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 329/10 ரன்கள் குவித்தது.

மெகா இலக்கைத் துரத்திய இங்கிலாந்து அணியில் துவக்க வீரர்கள் ஜேசன் ராய் 14 (6), ஜானி பேர்ஸ்டோ 1 (4) இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், துவக்கத்திலேயே இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. அடுத்து பென் ஸ்டோக்ஸ் 35 ரன்கள் சேர்த்த நிலையில் நடராஜன் வேகத்தில் வீழ்ந்தார். ஜோஸ் பட்லரும் 15 (18) ஆட்டமிழந்ததால், இங்கிலாந்து அணியின் தோல்வி கிட்டதட்ட உறுதியானது. இருப்பினும் டேவிட் மாலன்,லிவிங்ஸ்டன் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை நெருக்கடியில் இருந்து மீட்க முயற்சித்தனர். மாலன் 50 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். லிவிங்ஸ்டன் 36 ரன்கள் எடுத்து நடையைக் கட்டினார்.

அடுத்து சாம் கரன் 95* (82) மட்டும் தனியாளாகப் போராடி அரை சதம் கடந்து அணியை வெற்றிப்பாதை நோக்கி அழைத்துச் செல்ல முயற்சித்தார். கடைசி 18 பந்துகளில் 23 ரன்கள் தேவைப்பட்டது. 47ஆவது ஓவரில் 4 ரன்களும், அடுத்த ஓவரில் 5 ரன்களும் மட்டுமே கசிந்தது. இதனால் கடைசி ஓவருக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது. நடராஜன் சிறப்பாக பந்துவீசி 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால், இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 322/9 ரன்கள் மட்டும் சேர்த்து 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது. ஏற்கனவே, இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைபெற்று 1-1 என சமநிலையில் இருந்து. தற்போது மூன்றாவது போட்டியை இந்திய அணி கைப்பற்றியுள்ளதால் 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றி அசத்தியுள்ளது.

Be the first to comment on "3rd ODI: பௌலர்களை நடுங்க வைத்த சாம் கரன்: தொடரைக் கைப்பற்றியது இந்தியா!"

Leave a comment

Your email address will not be published.