3-வது டெஸ்ட்: மழையால் 4-வது நாள் ஆட்டம் முழுவதும் ரத்து- இங்கிலாந்து ஏமாற்றம்

இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் மான்செஸ்டர் எமிரேட்ஸ் ஓல்டு டிராஃபோர்டில் நடைபெற்று வருகிறது.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்3-வது டெஸ்ட்: மழையால் 4-வது நாள் ஆட்டம் முழுவதும் ரத்து- இங்கிலாந்து ஏமாற்றம்

து 369 ரன்கள் குவித்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 197 ரன்னில் சுருண்டது. இங்கிலாந்து அணி சார்பில் ஸ்டூவர்ட் பிராட் 6 விக்கெட்டுகள் அள்ளினார்.

பின்னர் 172 ரன்கள் முன்னிலைப் பெற்ற நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரர்களான ரோரி பேர்ன்ஸ், டொமினிக் சிப்லி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிப்லி 56 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து கேப்டன் ஜோ ரூட் களம் இறங்கினார். இவர் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ரோரி பேர்ன்ஸ் 90 ரன்னில் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்த நிலையில் 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. ஜோ ரூட் 56 பந்தில் 68 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

முதல் இன்னிங்சில் 172 ரன்களுடன் மொத்தமாக இங்கிலாந்து 398 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 399 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

399 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் நேற்றைய 3-வது நாள் ஆட்ட 10 ரன்கள் அடிப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. ஷாய் ஹோப் 4 ரன்னுடனும், கிரேக் பிராத்வைட் 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற இருந்தது. இன்றைக்குள் 8 விக்கெட்டுக்களையும் வீழ்த்தி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை 2-1 எனக் கைப்பற்றி விடலாம் என்று இங்கிலாந்து எண்ணியிருந்தது.

ஆனால் இன்று காலையில் இருந்தே மழை பெய்தது. இதனால் போட்டியை தொடங்குவதற்கான சாத்தியக்கூறு இல்லாமல் போனது. இதனால் நடுவர்கள் 4-வது நாள் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தனர்.

நாளையும் இதுபோன்று மழை பெய்தால் இங்கிலாந்தின் வெற்றிக் கனவு தகர்ந்துவிடும்.

ஒரு வருடத்திற்கு முன்பு கரீபியனில் ஆங்கில ஆண்களை 2-1 என்ற கோல் கணக்கில் வென்ற பிறகு விஸ்டன் டிராபியின் நடப்பு சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ். இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுவதன் மூலம் மேற்கிந்திய தீவுகள் எங் நகரில் முதல் டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம் வரலாற்றை உருவாக்க எதிர்பார்க்கின்றன

Be the first to comment on "3-வது டெஸ்ட்: மழையால் 4-வது நாள் ஆட்டம் முழுவதும் ரத்து- இங்கிலாந்து ஏமாற்றம்"

Leave a comment

Your email address will not be published.


*