3-வது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸை துவம்சம் செய்து தொடரை 2-1 என வென்றது இங்கிலாந்து

மான்செஸ்டரில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸை 269 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 2-1 எனக் கைப்பற்றியது இங்கிலாந்து.

இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வந்தது. முதல் இரண்டு போட்டிகளிலும் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருந்ததால் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடலாம் என களம் இறங்கின.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 369 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. பின்னர் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 197 ரன்னில் சுருண்டது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் 6 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் 172 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் விளையாடியது. அந்த அணி 2 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்திருக்குமபோது 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. ரோரி பேர்ன்ஸ் 90 ரன்களும், சிப்லி 56 ரன்களும, ஜோ ரூட் 68 ரன்களும் (அவுட் இல்லை) எடுத்தனர்.

பின்னர் 399 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது. நேற்று முன்தினம் 3-வது நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 2 விக்கெட் இழப்பிற்கு 10 ரன்கள் எடுத்திருந்தது.

நேற்றைய 4-வது நாள் ஆட்டம் முழுவதும் மழையால் ரத்து செய்யப்பட்டது. இன்று ஐந்தாவது நாள் ஆட்டம் தொடங்கியது. ஸ்டூவர்ட் பிராட் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோரின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சில் 37.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 129 ரன்னில் சுருண்டது. இதனால் இஙகிலாந்து 269 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து தொடரை 2-1 எனக் கைப்பற்றியது. 2-வது இன்னிங்சில் ஸ்டூவர்ட் பிராட் 4 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ் ஐந்து விக்கெட்டும் வீழ்த்தினர்.

ஸ்டூவர்ட் பிராட் தனது நடிப்பிற்காக ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். ஸ்டூவர்ட் பிராட் தனது 500 வது டெஸ்ட் விக்கெட்டை எடுத்து வரலாற்றை உருவாக்கினார், மேலும் அவர் ஆட்டத்தில் பேட் மற்றும் பந்து இரண்டிலும் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் இன்னிங்சில் 62 ரன்கள் எடுத்தார். இப்போது இங்கிலாந்து ஓல்ட் டிராஃபோர்டில் நடைபெறும் அடுத்த டெஸ்ட் தொடரில் பாகிஸ்தானை ஒரு வாரத்தில் எதிர்கொள்ளும்.

Be the first to comment on "3-வது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸை துவம்சம் செய்து தொடரை 2-1 என வென்றது இங்கிலாந்து"

Leave a comment

Your email address will not be published.


*