2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக தவான் இடம்பெற வேண்டும் என்று தினேஷ் கார்த்திக் விரும்புகிறார்.

www.indcricketnews.com-indian-cricket-news-100284

மும்பை: நியூசிலாந்துக்கு எதிராக ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியதை தொடர்ந்து, மீண்டும் நியூசிலாந்துடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி பங்கேற்று விளையிடவுள்ளது.

வரும் வெள்ளிக்கிழமையன்று தொடங்கவிருக்கும் இத்தொடரில் ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், ரோஹித் ஷர்மா இடம்பெறாததால் இந்திய அணியை மூத்த தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் வழிநடத்தவுள்ளார்.

மேலும் தவான் தலைமையிலான இந்திய அணிக்கு எதிராக கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி களமிறங்கவிருக்கும் முதல் ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இப்போட்டி தொடங்கவதற்கு முன்னதாக பேசிய இந்திய அணியின் மூத்த வீரர் தினேஷ் கார்த்திக், “2023ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் ஷிகர் தவான் இடம்பெற வேண்டும் என்று ஆதரவு தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து கார்த்திக் கூறுகையில், “ஷிகர் தவான் 30 வயதை கடந்துள்ளதால் அவரை அணியை விட்டு எளிதாக விளக்க முடியும் .ஆனால் தவான் நிச்சயம் ஒருநாள் உலகக் கோப்பைக்கான தொடரின் தொடக்க வீரராக இருப்பார். இல்லையெனில் அணி நிர்வாகம் அவரைச்சுற்றி இருக்க மாட்டார்கள்.

மேலும் ஷிகர் தவான் அணியில் இடம்பெற்றிருப்பதை பார்க்கும்போது, ஒருநாள் அணியில் அவரை தக்கவைத்துக்கொள்ள அணி நிர்வாகம் மிகவும் ஆர்வமாக இருப்பதைக் காட்டுகிறது. ஏனெனில் அவர் ஐசிசி போட்டிகளில் சிறந்த வீரராக செயல்பட்டவர்” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் மூத்த உறுப்பினராக இருந்த தினேஷ் கார்த்திக், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பைக்கான தொடரில் தவானின் சிறப்பான ஆட்டத்தை எடுத்துரைத்த அவர், ” கட்டைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக 2019 உலகக் கோப்பையில் இருந்து தவான் வெளியேற்றப்படுவதற்கு முன்பு, ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி சதம் விளாசி அசத்தினார்.

2019 உலகக் கோப்பையில் காயம் அடையும் வரை தவான் சிறப்பாகவே செயல்பட்டார். எனவே, தவான் ஃபார்மிலிருந்து முற்றிலும் மாறாதவரையில் அவரை அணியில் தக்கவைத்திருக்க வேண்டும். ஏனெனில் ஒரு தொடக்க வீரராக அனைவரும் நம்பக்கூடிய ஒருவர். அத்துடன் விளையாட்டுத் திட்டத்தை நன்கு அறிந்தவர் , கிரீஸை நன்றாகப் பயன்படுத்த தெரிந்தவர்” இவ்வாறு கார்த்திக் தெரிவித்தார்.

Be the first to comment on "2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக தவான் இடம்பெற வேண்டும் என்று தினேஷ் கார்த்திக் விரும்புகிறார்."

Leave a comment

Your email address will not be published.


*