2022 ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் விராட் கோலி மீண்டும் இடம்பிடித்துள்ளார், ஜஸ்பிரித் பும்ரா விலகினார்.

www.indcricketnews.com-indian-cricket-news-100325

மும்பை: அக்டோபர் மாத இறுதியில் ஆஸ்திரேலியாவில் துவங்கவிருக்கும் டி20 உலகக்கோப்பைக்கான முன்னோட்டமாக பார்க்கப்படும் ஆசியக் கோப்பை தொடர் வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பாகிஸ்தான் போன்ற அனைத்து ஆசிய அணிகளும் தங்களது அணிகளை குறித்து அறிவித்துவிட்டது.

இந்நிலையில் கேப்டனாக ரோஹித் ஷர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ கடந்த திங்களன்று வெளியிட்டுள்ளது. இத்தொடருக்கு துணை கேப்டனாக நீண்ட நாட்களாக அணியில் இடம் பெறாமலிருந்த கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி ஆசியக் கோப்பை தொடரிலிருந்து டி20 உலகக்கோப்பை வரை இந்திய அணியை மாற்றாமல் விளையாட முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டதால், ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதல் டி20 போட்டியின் போது காயமடைந்த ஹர்ஷல் படேல் குணமடைய இன்னும் சில வாரங்கள் ஆகும் என்பதால், ஆசிய கோப்பை தொடரிலும், டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் சில போட்டிகளிலும் விளையாட வாய்ப்பில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே முக்கிய வீரர்களில் ஒருவரான ஹர்ஷத் படேல் இடம் பெறாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான ஜஸ்பிரித் பும்ராவும் முதுகுவலி பிரச்சனை காரணமாக ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளதாக பிசிசிஐ தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை. அவர்கள் இருவருக்கும் தற்போது பெங்களூரிலுள்ள தேசிய கிரிக்கெட் அகாதமியில் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளது.

இதில் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் ரோஹித் ஷர்மா களமிறங்கவார்கள். 3வது இடத்தில் மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணத்தில் இருந்து ஓய்வுபெற்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோஹ்லி, ஜிம்பாப்வே ஒருநாள் போட்டிகளைத் தவிர்த்து, ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் விளையாடவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நடுவரிசையில் சூர்யகுமார் யாதவ் மற்றும் இளம் வீரர் தீபக் ஹூடாவும் ,விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் மற்றும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கும், ஆல்ரவுண்டராக அதிரடி வீரர் ஹர்திக் பாண்டியா மற்றும் ஜடேஜா ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

சுழற்பந்துவீச்சாளராக தமிழக வீரர் அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோரும், வேகப்பந்து வீச்சாளராக புவனேஸ்வர் குமார், ஆர்ஸ்தீப் சிங், ஆவேஷ் கான் ஆகியோரும் தேர்வாகியுள்ளனர்.  இதேபோல ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் சாஹர், அக்சர் பட்டேல் ஆகியோர் கூடுதல் வீரர்களாக அனுப்பபடவுள்ளனர்.

Be the first to comment on "2022 ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் விராட் கோலி மீண்டும் இடம்பிடித்துள்ளார், ஜஸ்பிரித் பும்ரா விலகினார்."

Leave a comment

Your email address will not be published.


*