2021: 17.1 ஓவரில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி அபார வெற்றிப் பெற்றது பெங்களூரு அணி….

www.indcricketnews.com-indian-cricket-news-106

அபுதாபி: துபாயில் நடைபெற்ற ஐபிஎல் 2021 (செப் 29)  தொடரில்  ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதிக் கொண்டது.  இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பெளலிங்கை தேர்வு செய்தது. அதன்பின்  ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் எவின் லூயிஸ் மற்றும்  யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி களமிறங்கினார்கள்.

இந்த ஜோடி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி  அனைத்து ஓவர்களிலும் சிக்ஸர் மற்றும் பவுண்டரி விட்டு விளாசினார்கள்.  தொடக்கமே மிகச் சிறப்பாக வினளயாடியது.  இதனால் பவர் ப்ளே இறுதியில் ராஜஸ்தான் அணி ரன்கள் இழப்பின்றி (56) ரன்களை விளாசியிருந்தனர். 

யஷஸ்வி ஜெய்ஸ்வால் (31) ரன்களிலும் எவின் லூயிஸ் (58) ரன்களிலும் எடுத்து  சில ஓவர் இடைவெளியில் அவுட் ஆனார்கள். அடுத்து களமிறங்கிய மஹிபால் லோமோர் வந்தவுடன் அவுட் ஆனார். ஷாபாஸ் அகமது வீசிய 14வது ஓவரில் ராஜஸ்தான் அணிக்கு இரட்டை செக் வைத்து, சஞ்சு சாம்சன் மற்றும் ராகுல் தெவாத்தியா ஒரே ஓவரில் அவுட் ஆக்கப்பட்டார்கள்.

அடுத்தடுத்து ரன்கள் சரிந்து வந்த நிலையில் 20ஆவது ஓவரை சிறப்பாக வீசிய ஹர்ஷல் பட்டேல் வெறும் 3 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்ககளை வீழ்த்தினார். இறுதியில்  20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட்டுகள்  இழப்பிற்கு  149 ரன்கள் சேர்த்தது. இதன் பின்களமிறங்கிய பெங்களூரு அணி தொடக்க ஆட்டக்காரர் தேவதூத் படிக்கல்  (20) ரன்கள் சேர்த்து  முஸ்தாபிஜூர் பந்தில் வெளியேறினார். இதனால் பவர் பிளே முடிவில் அந்த அணி 1 விக்கெட் இழப்புக்கு  54 ரன்கள் குவித்தது.

4 பவுண்டரிகளை ஓடவிட்டு சிறப்பான தொடக்கம் கொடுத்த பெங்களூரு அணியின் கேப்டன் கோலி (25) ரன்கள் எடுத்து மோரிஸ் வீசிய பந்தில் ரன் அவுட் ஆனார். அடுத்த களமிறங்கிய  ஸ்ரீகர் பாரத் – க்ளென் மேக்ஸ்வெல் ஜோடி வலுவான ரன்களை சேர்த்தார்கள். இந்த ஜோடி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்ரீகர் பாரத் 44/35 ( 3 பவுண்டரி 1 சிக்ஸர்) என ரன்களைக் குவித்து வெளியேறினார்.

அவருடன் விளையாடிய  க்ளென் மேக்ஸ்வெல் அரைசதம் கடந்த நிலையில் டி20 கிரிக்கெட்டில் 7000 ரன்களை கடந்து புதிய சாதனையையும் படைத்துள்ளார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர் 50/30  (6 பவுண்டரி, 1 சிக்ஸர்) அடித்து  பெங்களூரு அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இதனால் அந்த அணி 150 ரன்கள் கொண்ட இலக்கை 17.1 ஓவரிலேயே விளாசி   7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது பெங்களூரு அணி.

Be the first to comment on "2021: 17.1 ஓவரில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி அபார வெற்றிப் பெற்றது பெங்களூரு அணி…."

Leave a comment

Your email address will not be published.