2 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி அசத்தலாக வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி…

www.indcricketnews.com-indian-cricket-news-095

அபுதாபி: ஐபிஎல் 2021,38வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதின. இதில் கொல்கத்தா அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த விளையாடியது. இதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி தொடக்கமே வேகமாக விளையாட முயற்ச்சித்தது. ஆனால் இதுவே விக்கெட்டுகள் சரிவதற்க்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது.

தொடக்க வீரர்களான சுப்மன் கில் 5 பந்துகளில் 9 ரன்கள் மட்டும் எடுத்து வெளியேறினார். வெங்கடேஷ் ஐயர் 15 பந்தில் 18 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதன் பின் வந்த கேப்டன் மோர்கன் 8 ரன்களுக்கு வெளியேறினார். மறுபக்கம் ராகுல் திரிபாதி 33 பந்துகளில் 45 ரன்கள் குவித்து அணிக்கு நம்பிக்கை அளித்தார். இருப்பினும் அடுத்தடுத்து 4 விக்கெட்டுகள் சரிந்த நிலையில் நிதிஷ் ராணா நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கினார்.

அவரது ஜோடியான ஆண்ட்ரே ரஸல் 15 பந்துகளில் 18 ரன்கள்  குவித்தார். ராணா 27 பந்துகளில் 37 ரன்கள் கொடுத்து கடைசி வரை களத்தில்  நீடித்திருந்தார். கடைசி சில ஓவர்களில் விளையாடிய தினேஷ் கார்த்திக் 26 ரன்கள் விளாசிய நிலையில்  இந்த அணி  20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்திருந்தது. சென்னை அணிக்கு 172 ரன்கள்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

சிஎஸ்கே வின் தொடக்க வீரர்களான  ருத்ராஜ் 28 பந்துகளில் 40 ரன்கள் குவித்து அதிரடிக்காட்டினார் மற்றும் ஃபாப் டூப்ளசிஸ் 30 பந்துகளில் 43 ரன்களை விளாசினார். எனவே முதல் விக்கெட்டுலேயே 74 ரன்கள் சேர்த்தது அந்த அணி. பின்னர் வந்த மொயின் அலி 32 ரன்கள் விளாசி அவுட் ஆனார். அதன் பின் வந்த அம்பத்தி ராயுடு 10 (9), சுரேஷ் ரெய்னா 11, தோணி (1) என விக்கெட்டுகளை மலைபோல் கொல்கத்தா அணி குவித்தது. இதனால் 142 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் பறிகொடுத்தது சிஎஸ்கே.

26/12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ரவீந்திர ஜடேஜா அணியை தூக்கி நிறுத்தி அதிரடிக் காட்டினார். தொடர்ந்து 2 சிக்ஸர் 2 பவுண்டரி 2 டொக் என்று விளாசி 8 பந்துகளில் 22 ரன்களை தெறிக்கவிட்டுட்டார். வெறும் 4 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் சுனில் நரேன் முதல் பந்தில் ஷர்துல் தாக்கூரின் விக்கெட்டை கைப்பற்றி இரண்டாவது பந்தில் டாட் 3வது பந்தில் 3 ரன்கள் என்று விறுவிறுப்பாகச் சென்றது.

கடைசி 2 பந்துகளில் 1 ரன் தேவைப்பட்டது ஜடேஜா ஆட்டமிழந்தார். 1 பந்தில் 1 ரன் தேவைப்பட்ட நிலையில் மேட்ச் ட்ராவாகும் வாய்ப்பு ஒரு புறமும் வெற்றி வாய்ப்பு ஒருபுறமும் அணியினரை திக்குமுக்காட வைத்தது. இறுதியில் வந்த தீபக் சஹார் கடைசி பந்தை விளாசி ரன் எடுத்து ஒரே பந்தில் வெற்றிக்கு வழிவகுத்தார்.

Be the first to comment on "2 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி அசத்தலாக வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி…"

Leave a comment

Your email address will not be published.


*