2-வது டெஸ்டில் இங்கிலாந்தை அபாரமாக வென்றது நியூசிலாந்து:22 வருடத்திற்குப் பிறகு தொடரை வென்று சாதனை படைத்துள்ளது

www.indcricketnews.com-indian-cricket-news-02

இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது.லார்ட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது.இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 122 ரன்னில் சுருண்டதன் விளைவாக, சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக 22 வருடத்திற்குப்பின் தொடரை இழந்துள்ளது.2-வது டெஸ்ட் கடந்த 10-ந்தேதி எட்ஜ்பாஸ்டனில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.நியூசிலாந்து அணியின் டிரென்ட் போல்ட் (4), மேட் ஹென்ரி (3), அஜாஸ் பட்டேல் (2) ஆகியோரின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 303 ரன்னில் ஆல்அவுட் ஆனது.ரோரி பேர்னஸ், டான் லாரன்ஸ் தலா 81 ரன்கள் எடுத்தனர்.பின்னர் நியூசிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. டேவன் கான்வே (80), வில் யங் (82), ராஸ் டெய்லர் (80) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 388 ரன்கள் குவித்தது.இதனால் இங்கிலாந்து 85 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2-வது இன்னிங்சை தொடங்கியது. நியூசிலாந்து பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல்,இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்களைஅபாரமாக விரைவில் வீழ்த்தினர்.3-வது நாள் ஆட்ட முடிவில் 122 ரன்கள் எடுப்பதற்குள் 9 விக்கெட்டுகளை இழந்தது. ஆண்டர்சன் ரன்ஏதும் எடுக்காமலும், ஒல்லி ஸ்டோன் 15 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.4-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் ஒல்லி ஸ்டோன் 15 ரன்னில் வெளியேற,122 ரன்னிலேயே ஆல்அவுட் ஆனது இங்கிலாந்து. மேட் ஹென்ரி, நீல் வாக்னர் தலா 3 விக்கெட்டும் டிரென்ட் போல்ட், அஜாஸ் பட்டேல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.37 ரன்கள் மட்டுமே இங்கிலாந்து முன்னிலைப் பெற்றிருந்ததால், நியூசிலாந்துக்கு 38 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.நியூசிலாந்து அணி 10.5 ஓவரில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்து இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் தொடரை 1-0 எனக் கைப்பற்றியது.மேட் ஹென்ரி ஆட்ட நாயகன் விருதையும், முதல் டெஸ்டில் இரட்டை சதம் விளாசிய டேவன் கான்வே தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.மேலும் நியூசிலாந்து அணி, 22 ஆண்டுகளுக்கு பின்னர் இங்கிலாந்து அணியை அதன் மண்ணிலேயே தோற்கடித்துள்ளது.கடைசியாக கடந்த 1999ம் ஆண்டு தான் இங்கிலாந்து அணியை அதன் மண்ணிலேயே டெஸ்ட் தொடரில் வீழ்த்தியிருந்தது.அதுவும் கேப்டன் வில்லியம்சன் காயம் காரணமாக வெளியேறிய நிலையில், டாம் லாதம் தலைமையில் வென்றுள்ளது.

Be the first to comment on "2-வது டெஸ்டில் இங்கிலாந்தை அபாரமாக வென்றது நியூசிலாந்து:22 வருடத்திற்குப் பிறகு தொடரை வென்று சாதனை படைத்துள்ளது"

Leave a comment

Your email address will not be published.


*