வெஸ்ட் இண்டீஸை 5-0 என ஒயிட்வாஷ் செய்தது இந்தியா பெண்கள் கிரிக்கெட் அசத்தல்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5-வது டி20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய பெண்கள் அணி தொடரை 5-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி பங்கேற்றது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் 4 போட்டிகளில் இந்திய மகளிர் அணி அசத்தல் வெற்றி பெற்றது. இந்நிலையில் 5 வது மற்றும் இறுதி 20 ஓவர் கிரிக்கெட் இன்று நடைபெற்றது.


பிரோவிடென்சில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளான ஷஃபாலி வர்மா 9 ரன்னிலும், மந்தனா 7 ரன்னிலும் வெளியேறினர். ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் (50), வேதா கிருஷ்ணமூர்த்தி 57 ரன்களும் அடித்தனர். ஓவர் முடிவில் இந்திய பெண்கள் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்திருந்தது.


பின்னர் 135 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனைகள் களம் இறங்கினர். தொடக்க வீராங்கனை நைட் (22), விக்கெட் கீப்பர் கேம்ப்பெல் (19) மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எட்ட, 7 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் மட்டுமே வெஸ்ட் இண்டீஸ் அணியால் அடிக்க முடிந்தது.

இதனால் இந்திய பெண்கள் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸை 5-0 என ஒயிட்வாஷ் செய்துள்ளது. சுஷ்மா வர்மா தொடர் நாயகி விருதையும், வேதா கிருஷ்ணமூர்த்தி ஆட்ட நாயகி விருதையும் பெற்றனர்.

முதல் நான்கு போட்டிகளிலும் இந்திய பெண்கள் அணி வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் 5-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் உள்ளூர் நேரப்படி நேற்று இரவு நடைபெற்றது.

முன்னதாக நடந்து முடிந்த போட்டியில் இந்தியா 9 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 50 ரன்கள் அடித்தது. பின்னர் 11 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களம் இறங்கியது. அந்த அணியின் மூன்று விராங்கனைகள் இரட்டை இலக்க ரன்களை தாண்டினாலும் வெஸ்ட் இண்டீஸ் அணியால் 9 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்களே எடுக்க முடிந்தது. இந்திய பெண்கள் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Be the first to comment on "வெஸ்ட் இண்டீஸை 5-0 என ஒயிட்வாஷ் செய்தது இந்தியா பெண்கள் கிரிக்கெட் அசத்தல்"

Leave a comment

Your email address will not be published.


*