“நாங்கள் முடிவெடுப்பதில் தவறு செய்துவிட்டோம் “என்று ரோகித் ஷர்மா கூறியுள்ளார்.

www.indcricketnews.com-indian-cricket-news-0023

துபாய்: 7வது டி20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்ற நிலையில்  நவம்பர் 3ஆம் தேதி நடைபெற்ற 33ஆவது லீக் ஆட்டத்தில்  ஆஃப்கானிஸ்தான் அணியை 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழத்தி இந்தியா அபார வெற்றியைப் பெற்றது. இப்போட்டியில் ரோஹித் சர்மா 47 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து இப்போட்டியின் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 

இப்போட்டியின் முடிவில் ஆன்லைன் செய்தியாளர்களை சந்தித்த  இவர் , “ பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியில் எதாவது ஒரு போட்டியில்  தோல்வியடைந்தாலே டி20யிலிருந்து வெளியேற நேரிடும் ஆகையால் அனைத்து போட்டிகளிலும் வெல்வது கட்டாயமாக உள்ளது.

ஏனெனில் மீதமுள்ள போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்து வெற்றி பெற்று ரன் ரேட்டை உயர்த்தினால் மட்டுமே நம்மால் அரை இறுதி சுற்றுக்குள் நுழைய முடியும். இத்தகைய சூழ்நிலையில் வீரர்கள் பயமின்றி விளையாட வேண்டும், பிற அணிகளில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி சிந்தனை அதிகம் வேண்டாம். இதனால் நாம் சிறப்பான வீரர்கள் இல்லை என்று அர்த்தமில்லை

பேட்டிங் அல்லது பந்துவீச்சில் சரியான முடிவெடுக்காமல் நாம் தவறு செய்துவிட்டோம் அதை ஒவ்வொருவரிடமும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அணுகுமுறையில் வித்தியாசமாக செயல்பட்டதில் உணரமுடிந்தது. முதல் இரண்டு போட்டிகளில் இவ்வாறு இருந்திருந்தால் நிச்சயம்  தோல்வியை தழுவியிறுக்க மாட்டோம். இனி பயமின்றி புத்துணர்ச்சியுடன் விளையாடி வெற்றியை கைப்பற்றுவோம்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அடுத்த டி20 உலகக்கோப்பையின் கேப்டனாக ரோகித் ஷர்மா நியமிக்கப்படுவது ஆச்சரியமில்லை துணை கேப்டனாக ஐபிஎல் ல் பஞ்சாப் அணியில் சிறப்பாக விளையாடி அனுபவம் பெற்ற கே எல் ராகுல்க்கு அதிக வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

 மேலும் தலைமை பயிற்சியாளராக பணிபுரிந்து வந்த ரவி சாஸ்திரியின் ஒப்பந்தம் முடிந்ததால் பிசிசிஐ இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரரான ராகுல் டிராவிட்டை நியமித்துள்ளது. முன்னாள் இந்திய கேப்டனான இவர் 2023ல் நடக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை வரை இந்த பணியில் பணியாற்றுவார்.இந்திய அணியின் உறுதியான வீரருடன் எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியாகவுள்ளது” என்று ரோஹித் கூறினார்.

அவரிடமிருந்து வழிகாட்டுதலைப் பெற்று இணைந்து பணியாற்ற ஆவலுடன் நாங்கள் காத்துக்கொண்டிருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.

 இந்த டி20 உலகக்கோப்பை தொடர் முடிந்தவுடன்  இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. அந்த டி20 தொடருக்கு கே எல் ராகுல்இந்திய அணியின் புதிய கேப்டனாக செயல்படுவார் என்று கூறப்படுகிறது.

Be the first to comment on "“நாங்கள் முடிவெடுப்பதில் தவறு செய்துவிட்டோம் “என்று ரோகித் ஷர்மா கூறியுள்ளார்."

Leave a comment

Your email address will not be published.


*