ஐபிஎல் 2022: எட்டு ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள் வீரர்களை தக்கவைத்துள்ளனர்.

www.indcricketnews.com-indian-cricket-news-005

15வது ஐபிஎல் 2022ல்  புதிதாக இணைக்கப்பட்ட அகமதாபாத், லக்னோ அணிகள் சேர்த்து மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ளது. இவ்விரு அணிகளுக்கு வீரர்களை தேர்வுசெய்ய மெகா ஏலம் நடைபெறவுள்ளது. இதில் ஒரு அணி மூன்று உள்நாட்டு ஒரு வெளிநாட்டு வீரர்கள் அல்லது இரண்டு உள்நாட்டு இரண்டு வெளிநாட்டு வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் என  சமீபத்தில் பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

தக்கவைக்கப்போகும் வீரர்களின் பட்டியலை ஒப்படைக்க  கடைசி நாளான நேற்று (நவம்பர்:30)  எந்தெந்த அணிகள் யார் யாரை தக்கவைத்துள்ளது என்பது குறித்து அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் : விராட் கோலி (15 கோடி),  கிளென் மேக்ஸ்வெல் (11 கோடி), முகமது சிராஜ் (7 கோடி) ஆகியோரை  தக்கவைத்துள்ளது. மேலும், அந்த அணிக்கு மீத தொகையாக 57 கோடி இருக்கிறது.

மும்பை இந்தியன்ஸ் : ரோஹித் ஷர்மா (16 கோடி), ஜஸ்பரீத் பும்ரா (12 கோடி), கெய்ரன் பொல்லார்ட் (6 கோடி), சூர்யகுமார் யாதவ் (8 கோடி) ஆகியோரை தக்கவைத்துள்ளது. மீத தொகை 48 கோடி இருக்கிறது.

பஞ்சாப் கிங்ஸ்: மயங்க் அகர்வால் (14 கோடி), அர்ஷ்தீப் சிங் (4 கோடி) ஆகியோரை தக்கவைத்துள்ளது. இதன்மூலம் , லக்னோ அணிக்கு கே.எல். ராகுல் செல்லவுது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது. மேலும், இந்த அணிக்கு 72கோடி மீத தொகை இருக்கிறது.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத்: கேன் வில்லியம்சன் (14 கோடி), அப்துல் சமத் (4 கோடி), உம்ரான் மாலிக் (4 கோடி) ஆகியோரை தக்கவைத்துள்ளது. இதன்மூலம்,  லக்னோ அணிக்கு ரஷித் கான்  செல்வது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது. மேலும், இந்த அணிக்கு 68 கோடி மீத தொகை இருக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் : ரவீந்திர ஜடேஜா (16 கோடி), மகேந்திரசிங் தோனி (12 கோடி), மொயின் அலி (8 கோடி), ருதுராஜ் கெய்க்வாட் (6 கோடி) ஆகியோரை தக்கவைத்துள்ளது. மீத தொகை 48 கோடி இருக்கிறது.

டெல்லி கேபிடல்ஸ் :  ரிஷப் பந்த் (16 கோடி), அக்சர் படேல் (9 கோடி), பிரித்வி ஷா (7.5 கோடி), ஆன்ரிக் நோர்க்கியா (6.5 கோடி) ஆகியோரை தக்கவைத்துள்ளது. மீத தொகை 47.5 கோடி இருக்கிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: வருண் சக்ரவர்த்தி (8 கோடி) வெங்கடேஷ் ஐயர் (8 கோடி)  ஆண்ட்ரே ரஸல் (12 கோடி) சுனில் நரைன் (6 கோடி) ஆகியோரை தக்கவைத்துள்ளது. மீத தொகையாக 48 கோடி இருக்கிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் :சஞ்சு சாம்சன் (14 கோடி), ஜாஸ் பட்லர் (10 கோடி), யாஷஸ்வி ஜெய்ஷ்வால் (4 கோடி) ஆகியோரை தக்கவைத்துள்ளது. மீத தொகையாக 62 கோடி  இருக்கிறது.

Be the first to comment on "ஐபிஎல் 2022: எட்டு ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள் வீரர்களை தக்கவைத்துள்ளனர்."

Leave a comment

Your email address will not be published.


*