ஐபிஎல்: முதல் போட்டியில் வெற்றி யாருக்கு என்று காம்பீர் நெத்தியடி கணிப்பு

வருகிற சனிக்கிழமை தொடங்கவுள்ள ஐபிஎல் முதல் லீக் போட்டியில் சென்னை அணி, மும்பை அணியை எதிர்கொள்ள உள்ளது. இப்போட்டியில் யார் வெற்றிபெறப்போகிறார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் காம்பீர் தனது கணிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

சீசன் துவக்க வீரர் சி.எஸ்.கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) இடையே விளையாடவுள்ளார். கடந்த ஆண்டு இறுதிப் போட்டியும் இந்த இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்றது, சென்னை ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்றது. இந்த சீசன் மிகவும் உற்சாகமான போட்டியுடன் தொடங்கும் என்று ரசிகர்கள் நம்புவதால் இந்த இரு அணிகளும் இந்த லீக்கில் மிகவும் வெற்றிகரமாக கருதப்படுகின்றன.

மருத்துவ பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்கும் 13ஆவது ஐபிஎல் சீசனில் ஸ்டேடியங்களில் ரசிகர்களுக்கு அனுமதியில்லை. இது வீரர்களிடையே குறிப்பிடத் தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. இதனால், முதல் போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பல கிரிக்கெட் விமர்சகர்கள் இதுகுறித்து கருத்து தெரிவித்து வரும் நிலையில் காம்பீரும் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

முதல் போட்டியில் சென்னை அணியை, மும்பை இந்தியன்ஸ் எளிதில் சமாளித்து விடும். ஜஸ்பரித் பும்ரா, ட்ரன்ட் போல்ட் உள்ளிட்டோர் சென்னை பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்வார்கள் என்று கூறியுள்ளார் காம்பீர்.

“பும்ரா, போல்ட் பந்து வீச்சைக் காண ஆவலுடன் உள்ளேன். இவரும் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள், விக்கெட்களை எளிதில் வீழ்த்தக்கூடியவர்கள், தனித்துவமிக்க பந்து வீச்சாளர்கள்” என்று தனியார் இணையதள பத்திரிகைக்குப் பேட்டியளித்தார்.

சென்னை அணியில் சுரேஷ் ரெய்னா இல்லாதது பின்னடைவை ஏற்படுத்தும் என்றார். ரெய்னா கடந்த மாதம் அவசரவசரமாக நாடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

”ரெய்னா இல்லாதது சென்னை அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். வெற்றிடமாக இருக்கும் மூன்றாவது வரிசையில் வாட்சன் களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. இருப்பினும் ரெய்னாவுக்கு நிகராக யாராலும் ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாது. பும்ரா, போல்ட் போன்ற மிரட்டல் பந்துவீச்சாளர்களைச் சென்னை அணி எப்படிச் சமாளிக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். தொடக்க ஆட்டக்காரராகச் சென்னை அணியில் யார் களமிறங்கப்போகிறார்கள் என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது” என்றார் காம்பீர்.

“என்னுடைய கணிப்புப்படி மும்பை அணி ஆதிக்கம் செலுத்துவார்கள். பேட்டிங் பந்துவீச்சில் வலுவான அணியாகத் திகழ்கிறார்கள். ட்ரன்ட் போல்டும் அணியில் இணைந்திருப்பது கூடுதல் பலம்” என்று கூறினார்.

வருகிற சனிக்கிழமை அபுதாபியில் இரவு 7:30 மணிக்குத் தொடங்கவுள்ள முதல் லீக் போட்டியில் சென்னை, மும்பை அணிகள் மோதவுள்ளன.

Be the first to comment on "ஐபிஎல்: முதல் போட்டியில் வெற்றி யாருக்கு என்று காம்பீர் நெத்தியடி கணிப்பு"

Leave a comment

Your email address will not be published.


*