ஐசிசி டி20 உலகக்கோப்பை: 15 வீரர்களை கொண்ட இந்திய அணியில் அக்ஸர் படேல் க்கு பதிலாக ஷார்துல் தாகூர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

www.indcricketnews.com-indian-cricket-news-054

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 17 ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் சூப்பர் 12 சுற்று போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில்

 தற்போது மேலும் ஒரு அறிக்கையை  இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது . டி20 உலகக் கோப்பைக்கான 15 பேரைக் கொண்ட வீரர்கள் பட்டியலில் இருந்து அக்சர் படேல் நீக்கப்பட்டு காத்திருப்பு வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். காத்திருப்பு வீரர்கள் பட்டியலில் இருந்த ஷர்தூல் தாகூர் 15 பேர்கொண்ட வீரர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்  என பிசிசிஐ யின் செயலாளர் ஜெய் ஷா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்திய அணி வீரர்களை அறிவிக்கபட்ட போதே ஐபிஎல் 2021 முடிந்த பிறகு அணியில் மாற்றங்கள் செய்து கொள்ள ஐசிசி நமக்கு அனுமதி அளித்துள்ளது. அதன்படியே தற்போது ஐபிஎல் 2021 ல் 29 வயதான சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் விளையாடி வரும் வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஆல்ரௌண்டர் ஆன ஷர்தூல் தாகூர் 15 போட்டிகளில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரையும் தனது அபார ஆட்டத்தால் ஈர்த்துள்ள அவரை தேர்வு செய்தனர்.

மேலும் ஆல் ரௌண்டர் ஹார்திக் பாண்டியா  முதுகுவலி பிரச்சனையால் ஐபிஎல் 2021 கிரிக்கெட்டில் ஒரு ஆட்டத்தில் கூட பௌலிங் செய்யவில்லை என்பதால் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் குறைவதாலும் ஆல்ரௌண்டர் தேவைப்படுவதால் இந்திய சீனியர் கிரிக்கெட் தேர்வுக்குழு கமிட்டி மேற்கொண்ட ஆலோசனையின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பிடிஐ யிடம் தேர்வாளர்கள் ஆணையம் தெரிவித்தது.ஐபிஎல் இறுதிச்சுற்றில் ரவீந்திர ஜடேஜாவுக்கு காயம் ஏதேனும் ஏற்பட்டால்

அக்சர் படேல்  இந்திய அணி வீரர்கள் பட்டியலில் இடம்பெற வாய்ப்புள்ளது. தற்போது ஐபிஎல் 2021ல் சிறப்பாக விளையாடி வரும் அவேஷ் கான், உம்ரான் மாலிக், ஹர்ஷல் பட்டேல், லுக்மான் மேரிவாலா, வெங்கடேஷ் ஐயர், கர்ன் சர்மா, ஷாபாஸ் அகமது மற்றும் கே.கவுதம் ஆகியோர் நிகிரப்பந்து வீச்சாளர்களாக சேர்க்கப்பட்டு தங்களை தனிமைப்படுத்தியுள்ளனர்.

இதில் ஹர்ஷல் பட்டேல் மட்டும் காத்திருப்பு வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இந்திய அணியின் 15 வீரர்கள்:விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), சூர்யகுமார் யாதவ், கே எல் ராகுல், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், ரவீந்திர  ஜடேஜா, ராகுல் சாஹர், ஹர்திக் பாண்டியா,ரவிச்சந்திரன் அஷ்வின் , ஜஸ்பிரித் பும்ரா,ஷர்துல் தாக்கூர், வருண் சக்கரவர்த்தி, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி

Be the first to comment on "ஐசிசி டி20 உலகக்கோப்பை: 15 வீரர்களை கொண்ட இந்திய அணியில் அக்ஸர் படேல் க்கு பதிலாக ஷார்துல் தாகூர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்."

Leave a comment

Your email address will not be published.


*