ஹாங்காங்கிற்கு எதிரான ஆட்டத்திற்கு பிறகு ஆவேஷ் கானுக்குப் பதிலாக சிஎஸ்கே ஆல்ரவுண்டர் நியமிக்கப்பட வேண்டும் என்று கிரிக்கெட் நிபுணர்கள் விரும்புகிறார்கள்.

www.indcricketnews.com-indian-cricket-news-0065

மும்பை: ஆசியக் கோப்பை தொடரில் கடந்த புதன்கிழமையன்று நடைபெற்ற ஹாங்காங்கிற்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் இணைந்து 45 பந்துகளில் 98 ரன்கள் எடுத்ததன் மூலம் இந்திய அணி அபார வெற்றிபெற்றது.

இருப்பினும் அனுபவமும், திறமையும் மிக்க இந்திய அணி ஆட்டத்தில் ஏராளமான தவறுகள் செய்து சொதப்பியது. குறிப்பாக பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி பந்துவீச்சில் ஏமாற்றமளித்தது. ஏனெனில் டெத் பவுலிங் எனப்படும் இறுதிக் கட்ட ஓவரை வீச கொஞ்சம் பொறுப்பும், திறமையும் தேவை. அது ஆவேஷ் கானுக்கு உள்ளது என்று ரோஹித் ஷர்மா நினைத்தார்.

ஆனால் ஆவேஷ் கான் 24 பந்தில் 53 ரன்கள் விட்டுக்கொடுத்து வெறும் 1 விக்கெட்டை மட்டுமே கைப்பற்றினார். இதனால் கத்துக்குட்டி அணியான ஹாங்காங் பேட்டர்களுக்கே பந்து போட முடியவியாமல் இப்படி சொதப்பினால், ஒன்று அவர் ஃபார்மில் இல்லை அல்லது அவருக்கு கடைசி கட்டத்தில் பந்துவீச தெரியவில்லை என்று அர்த்தம் என்று ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

மேலும் முழு உடல்தகுதி பெற்று பேட்டிங்கிலும் கலக்கும் சிஎஸ்கே வீரர் தீபக் சாஹருக்கு வாய்ப்பு தராமல், இதுவரை சர்வதேச டி20 போட்டிகளில் டெத் ஓவரில் 38 பந்துகள் வீசி 114 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை கூட கைப்பற்றாத ஆவேஷ் கானுக்கு இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு வாங்கியதற்கான காரணம் என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மேலும் கிரிக்கெட் நிபுணர்கள் பலர் ஆவேஷ் கானுக்கு பதில் அதிரடி ஆல்ரவுண்டர் தீபக் சாஹரை இந்திய அணி பயன்படுத்தலாம் எனவும், இதன்மூலம் இந்திய அணியின் பேட்டிங்கும் அதிகரிக்கும். ஆனால் ஆவேஷ் கான் அந்த இடத்திற்கு சரிப்பட்டு வரமாட்டார் என்று கருத்துக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இப்போட்டியின் வெற்றிக்குப் பிறகு பேசிய ரோஹித் ஷர்மா, “எங்களது பேட்டிங் சிறப்பாக இருந்தது. அணியில் பேட்டிங் வரிசை சிறப்பாக இருக்கிறது. எந்த இடத்திலும் வீரர்கள் களமிறங்க தயாராக இருக்கிறார்கள்.  ஆனால்,பந்துவீச்சு தான் எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இல்லை. எங்கள் பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டு இருக்கலாம். ஆனால் இனிவரும் போட்டிகளில் சிறப்பாக செயல்படுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று ரோகித் சர்மா தனது விரக்தியை வெளிப்படுத்தினார். 

மேலும் கடுமையாக சாடிய இந்திய தேசிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரீதிந்தர் சோதி இதுகுறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸிடம் பேசுகையில், “பாகிஸ்தானுக்கு எதிரான பந்துவீச்சை ஒப்பிடும் போது, ​​இப்போட்டியில் எங்களின் வேகப்பந்துவீச்சு மிகவும் குறைவாக இருந்தது. எனினும் ஹாங்காங்கிற்கு எதிரான மோசமான ஆட்டத்திற்குப் பிறகு இளம் வேகப்பந்து வீச்சாளர்களின் நம்பிக்கை பாதிக்கப்பட்டிருக்கும்” என்று தெரிவித்தார்.

அதேபோல இந்திய தேசிய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் சபா கரீம் இதுகுறித்து கூறுகையில், “நீங்கள் பந்துவீச்சின் உயர் தரத்தை பராமரிக்கும் போதும், குறைந்த அணிகளுக்கு எதிராக விளையாடும்போதும் இரக்கமற்ற தன்மையுடன் செயல்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Be the first to comment on "ஹாங்காங்கிற்கு எதிரான ஆட்டத்திற்கு பிறகு ஆவேஷ் கானுக்குப் பதிலாக சிஎஸ்கே ஆல்ரவுண்டர் நியமிக்கப்பட வேண்டும் என்று கிரிக்கெட் நிபுணர்கள் விரும்புகிறார்கள்."

Leave a comment

Your email address will not be published.


*