ஹர்திக் பாண்டியா சிறப்பாக பந்துவீசுகிறார் என குஜராத் டைட்டன்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர் ஆஷிஷ் கபூர் தெரிவித்துள்ளார்.

www.indcricketnews.com-indian-cricket-news-067

பெங்களூரு: இந்தியன் பிரீமியர் லீக் 2022 மார்ச் கடைசி வாரத்தில் தொடங்கவிருக்கிறது.  இதில் புதிய அணியாக அறிமுகமாகும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் ஹர்திக் பாண்டியாவின் உடற்தகுதி மீதுதான் அனைவரது பார்வையும் இருக்கும். ஏனெனில் கீழ் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக, ஐபிஎல் 2021இல் மும்பைக்காக அதிகம் பந்து வீசவில்லை.

அதேபோல நவம்பர் 2021இல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற ஐசிசி டி20 உலகக்கோப்பை 2021லும் பந்துவீச்சில் அதிகம் ஈடுபடாமல் பேட்டிங் மட்டுமே செய்துவந்தார்.  இந்நிலையில் பாண்டியா ஒரு பேட்டராக மட்டுமே எந்தவொரு அணியிலும் சேர்ப்பது சமநிலையை சீர்குலைத்தது, இதன் காரணமாக இந்தியாவின் டி20 உலகக்கோப்பை அணியில் ஹர்திக் பாண்டியாவை தேர்வு செய்தது அனைத்து தரப்பிலிருந்தும் கடுமையான எதிர்ப்பை ஏற்படுத்தியது.

பிறகு நட்சத்திர இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா எந்த போட்டியிலும் விளையாடவில்லை. இதனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பந்துவீச்சிலிருந்து ஹர்திக் பாண்டியா விலகியிருதந்தார். அதைத்தொடர்ந்து, பந்துவீசுவதற்கு உண்டான உடற்தகுதியை மீண்டும் பெறும்  முயற்சியில் கவனம் செலுத்தி வருவதால்,தன்னை தேர்வுப் போட்டியிலிருந்து விலக்கி வைக்குமாறு தேர்வாளர்களிடம் பாண்டியா கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில்,ஹர்திக் பாண்டியாவை குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டனாக அறிவித்ததை தொடர்ந்து,

அந்த அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர் ஆஷிஷ் கபூர்,ஹர்திக் வலைகளில் பந்து வீசி பயிற்சி மேற்கொண்டு வருகிறார் எனவும்,மீண்டும்  ஆல்-ரவுண்டர் பணிகளைத் தொடங்கிவிட்டார் எனவும் தெரிவித்தார். மேலும் இதுகுறித்து கூறுகையில், “கடந்த இரண்டு மாதங்களாக நான் பஹ்ரைனில் இருந்தேன், அங்கு தேசிய அணிக்கு பயிற்சியாளராக இருந்தேன்.

இருப்பினும், நாங்கள் ஹர்திக்கை தக்கவைத்ததில் இருந்தே நெஹ்ரா தொடர்ந்து தொடர்பில் இருந்து அவருடன் பேசி வருகிறார். மேலும்  அவருக்கான பயிற்சி அமர்வுகளை  எங்கு ,எவ்வாறு ஏற்பாடு செய்வது, என்பது குறித்தும் நெஹ்ரா பேசியுள்ளார்” என்று குஜராத் டைட்டன்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சு பயிற்சியாளர் ஆஷிஷ் கபூர் ஆசிய சர்வதேச செய்தியாளரிடம் கூறினார்.

மேலும்,” அவர் முகாமுக்கு வருவதற்கு முன்பு சில ரஞ்சி டிராபி விளையாட்டுகளை விளையாடும்படி அவரிடம் கேட்டுக்கொண்டோம். இந்திய அணியில் அவரால் பந்துவீச முடியுமா என்பதை தெரிந்து கொள்வதற்காக நாங்கள் பந்துவீச்சில் ஈடுபடுத்தினோம். அவரும் பந்து வீச்சில் செயல்பட ஆரம்பித்து விட்டார்.

ஹர்திக் நன்றாக பேட்டிங், பவுலிங் செய்கிறார், எந்த விஷயத்திலும் அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவரால் பந்துவீசவும், பேட்டிங் செய்யவும் முடிந்தால் அது கூடுதல் சாதகமாகும், ஏனெனில் இந்தியாவில் அதிக ஆல்-ரவுண்டர்கள் இல்லை . இந்த நேரத்தில் ஹர்திக்கை பற்றி மட்டுமே சிந்திக்க முடியும், ஏனெனில் உங்களுடன் அந்த ஆல்ரவுண்டர் இருந்தால், நீங்கள் பிளஸ் சைடில் இருப்பதாக நான் நினைக்கிறேன், “என்று கபூர் கூறினார்.