ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் அணிக்குத் திரும்புவது அணியை மேலும் வலுப்படுத்துகிறது- ஷிகர் தவான்…

www.indcricketnews.com-indian-cricket-news-042

துபாய்: இங்கிலாந்து அணியுடனான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி புனே மைதானத்தில் மார்ச் 23ம் தேதியன்று நடந்தது. இதில் ஃபீல்டிங் செய்த போது இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயருக்கு தோள்பட்டையில் காயம் உண்டானது. அவரது இடது தோள்பட்டை எலும்பு இடம் மாறியதால் அவருக்கு ஆபரேஷன் செய்ய வேண்டி இருந்தது. எனவே தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக  4 மாத காலமாக ஓய்வில் இருக்க வேண்டி இருந்ததால்  ஐபிஎல் 2021 யில் கொரனாவிற்கு முன்பு நடந்த எந்த போட்டிகளிலும் ஷ்ரேயாஸ் ஐயரால் பங்குபெற முடியவில்லை. 

இவருக்கு பதிலாக அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டார். அணியையும் நல்லமுறையில் வழிநடத்திவந்தார். ‘கொரோனா தொற்று அதிகரிப்பால் மே மாதத்தில் போட்டி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.  திரும்பவும் இந்த மாதம் தொடங்குகிறது. இந்நிலையில் முழு ஓய்வு பெற்று, குணமடைந்து அதே பார்மில் அணிக்குத் திரும்புகிறார் ஸ்ரேயாஸ். இது குறித்து டெல்லி கேபிடல்ஸின் மூத்த பேட்ஸ்மேன் ஷிகர் தவான் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் இரண்டாம் கட்டம் வரும் செப்டம்பர் 19 அன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது. ஐபிஎல் தொடங்கிய முதல் போட்டியில் நாங்கள் ஒரு பார்மில் முன்னேறி  ஓடிக் கொண்டிருந்தோம் ஆனால் கொரோனா காரணமாக அது தடைபட்டு நின்றுவிட்டது.  அந்த வேகத்தை நாங்கள் திரும்பப்பெற வேண்டும். நிச்சயம் அதற்காக கடும் பயிற்ச்சி மேற்கொள்வோம். வரவிருக்கும் போட்டிகளில் விளையாட நான் ஆர்வமாக உற்சாகத்துடன் உள்ளேன்.

இதில் முக்கியமானது என்னவென்றால் எங்கள் அணி  ஆரம்பகட்டத்திலிருந்து நன்கு  சமநிலையில் உள்ளது. அணியில் நல்ல ஒற்றுமைச் சூழலும் நிலவுகிறது. மேலும் இந்நிலையில்,

ஷ்ரேயாஸ் ஐயர் அணிக்கு திரும்புவது மிகவும் மகிழ்ச்சியளிப்பதோடு மட்டுமல்லாமல் அணிக்கு மேலும் பலத்தை கூட்டியுள்ளது. நிச்சயம் அவர் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்பதில் ஐயமில்லை. எனவே ஹைதராபாத்துக்கு எதிரான முதல் போட்டிக்காக நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம். போட்டியின்போது நிச்சயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என ஸ்ரேயாஸ்  வருகைக் குறித்துக் கூறியுள்ளார்.

 மேலும் கடந்த ஆண்டின் இறுதிப்போட்டியாளர்களான டெல்லி கேபிடல்ஸ், செப்டம்பர் 22 அன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை எதிர்கொள்ள உள்ளது.  முதல் பகுதி ஐபிஎல் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய டெல்லி அணி இரண்டாம் பகுதியிலும் ஸ்கோர் போர்டின் முதல் இடத்தைப் பிடிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. பல நாட்களுக்கு பிறகு அணிக்கு வரும் இளம் கேப்டன் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகம் எழுந்துள்ளது.

Be the first to comment on "ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் அணிக்குத் திரும்புவது அணியை மேலும் வலுப்படுத்துகிறது- ஷிகர் தவான்…"

Leave a comment