ஷுப்மன் கில்லின் அற்புதமான சதம் வெற்றியை இந்திய அணியின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இங்கிலாந்தின் வெற்றிக்கு 332 ரன்கள் தேவை.

www.indcricketnews.com-indian-cricket-news-100512
Shubman Gill of India and Axar Patel of India during the 3rd day of the second test match between India and England held at the Dr. Y.S. Rajasekhara Reddy ACA-VDCA Cricket Stadium, Visakhapatnam on the 4th February 2024 Photo by Saikat Das / Sportzpics for BCCI

விசாகப்பட்டினம்: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்  பங்கேற்று விளையாடி வருகிறது. இத்தொடரில் ஏறகனவே நடந்துமுடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுவரும் நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதியன்று விசாகப்பட்டினத்தில் நடைபெறத் தொடங்கியது.

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்த இந்திய அணி யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் அபார ஆட்டத்தால் முதல் இன்னிங்ஸ் முடிவில் 396 ரன்களைக் குவித்து ஆல் அவுட்டனாது. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் 19 பவுண்டரி, 7 சிக்சர்கள் என 209 ரன்களைச் சேர்த்தார். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி இந்திய அணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் முதல் இன்னிங்ஸில் 253 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. அதன்படி தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்களைச் சேர்த்தது. இதனையடுத்து நேற்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தில் ரோஹித் சர்மா 13 ரன்களுடனும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 15 ரன்களுடனும் இன்னிங்ஸைத் தொடங்கினர். இதில் ரோஹித் சர்மா 13 ரன்களிலும், ஜெய்ஸ்வால் 17 ரன்களிலும் என அடுத்தடுத்த ஓவர்களில் ஜேம்ஸ் ஆண்டர்சனிடன் விக்கெட்டை இழந்தனர். 

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஷுப்மன் கில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 29(52) ரன்களிலும், ராஜத் பட்டிதார் 9(19) ரன்னிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இருப்பினும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கில் சதமடித்து அசத்தினார். அதன்பின்னர் அவரும் 104(147) ரன்கள் எடுத்திருந்த நிலையில் சோயிப் பஷீரிடம் விக்கெட்டை இழந்தார்.

அதன்பின்னர் களமிறங்கிய அஸ்கர் படேல் 45(84) ரன்களிலும், ஸ்ரீகர் பரத் 6(28) ரன்னிலும், அஸ்வின் 29(61) ரன்களிலும், குல்தீப் யாதவ் மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் ரன்கள் ஏதுமின்றியும் என ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக்கட்டினர். இதனால் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 255 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.

இங்கிலாந்து அணி தரப்பில் டாம் ஹார்ட்லி 4 விக்கெட்டுகளையும், ரெஹான் அஹ்மத் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு 399 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களான ஸாக் கிரௌலி-பென் டக்கெட் ஜோடியில் அதிரடியாக விளையாடி வந்த பென் டக்கெட் 28(27) ரன்கள் எடுத்திருந்த நிலையில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 67 ரன்களை எடுத்துள்ளது. 

இதில் ஸாக் கிரௌலி 29(50) ரன்களுடனும், ரெஹான் அஹ்மத் 9(8) ரன்களுடனும் என களத்தில் உள்ளனர். அதன்படி இன்று தொடங்கவிருக்கும் நான்காம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 332 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடவுள்ளது.

Be the first to comment on "ஷுப்மன் கில்லின் அற்புதமான சதம் வெற்றியை இந்திய அணியின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இங்கிலாந்தின் வெற்றிக்கு 332 ரன்கள் தேவை."

Leave a comment

Your email address will not be published.


*