வெஸ்ட் இண்டீஸ்வுடன் விளையாடும் இந்திய அணி இன்று அறிவிப்பு, ரோஹித் ஓய்வு

இந்திய கிரிக்கெட் அணி தற்போது வங்காளதேசத்துடன் விளையாடி வருகிறது. 3 போட்டிக்கொண்ட 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.

2 டெஸ்ட் தொடரில் இந்தூரில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் பகல்-இரவாக கொல்கத்தாவில் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. 26-ந்தேதியுடன் வங்காளதேசத் தொடர் முடிகிறது.

இந்திய அணி அடுத்து வெஸ்ட் இண்டீசுடன் விளையாடுகிறது. அந்த அணியுடன் மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் ஆட்டத்தில் ஆடுகிறது.

20 ஓவர் போட்டிகள் டிசம்பர் 6 (மும்பை), 8 (திருவனந்தபுரம்) மற்றும் 11 (ஐதராபாத்) ஆகிய தேதிகளிலும், ஒருநாள் போட்டிகள் டிசம்பர் 15 (சென்னை), 18 (விசாகப்பட்டினம்) மற்றும் 22 (கட்டாக்) ஆகிய தேதிகளிலும் நடக்கிறது.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணி நாளை (21-ந்தேதி) அறிவிக்கப்படுகிறது. எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வுக் குழுவினர் கொல்கத்தாவில் கூடி வீரர்களை தேர்வு செய்கிறார்கள்.

ஒருநாள் தொடரில் அதிரடி வீரரும், தொடக்க ஆட்டக்காரருமான சர்மாவுக்கு ஓய்வு கொடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வங்காள தேசத்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் விராட்கோலிக்கு ஓய்வு கொடுத்ததுபோல் அவருக்கு ஓய்வு அளிக்க தேர்வுக் குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.

ரோகித் ஓய்வு அளிக்கப்படும் பட்சத்தில் டெஸ்டில் சிறப்பாக விளையாடும் மயங்க் அகர்வாலுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். மேலும் மற்றொரு தொடக்க வீரரான தவானின் ஆட்டமும் மோசமாக இருக்கிறது. இதனால் அவரும் நீக்கப்படுவதற்கான நிலையில் உள்ளார்.

ஒருநாள் போட்டி அணியில் அகர்வால் இடம்பெறுவதற்கான தகுதிநிலையில் உள்ளார். தொடக்க வீரரான அவர் டெஸ்டில் 8 இன்னிங்சில் 2 முறை இரட்டை சதம் அடித்து சாதித்து இருந்தார்.

காயம் அடைந்த வேகப்பந்து வீரர் புவனேஷ்வர்குமார் உடல் தகுதியுடன் இருப்பதால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம் பெறலாம் என்று தெரிகிறது. கலீல் அகமது இடத்திற்கு அவர் தேர்வு செய்யப்படலாம்.

மற்றொரு வேகப்பந்து வீரரும், இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திர வீரருமான பும்ரா வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் இடம்பெறமாட்டார். நியூசிலாந்து பயணத்தில் அவர் அணியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத்தின் பதவி காலம் இந்த ஆண்டு இறுதியுடன் நிறைவடைகிறது. இதனால் அவர் தலைமையில் தேர்வு செய்யப்படும் கடைசி அணி இதுவாக தான் இருக்கும்.

Be the first to comment on "வெஸ்ட் இண்டீஸ்வுடன் விளையாடும் இந்திய அணி இன்று அறிவிப்பு, ரோஹித் ஓய்வு"

Leave a comment

Your email address will not be published.


*