வெற்றிநடை போடுங்கள்! இளம் வீரர்களை வாழ்த்தும் சச்சின்!

Sachin Tendulkar wish Suryakumar, Ishan, Tewatia on maiden call-up
Sachin Tendulkar wish Suryakumar, Ishan, Tewatia on maiden call-up

இந்திய அணிக்கு தேர்வாகியுள்ள புதுமுகங்களுக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து இடையிலான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்து, இரு அணிகளும் 1-1 என சமநிலையில் நீடிக்கின்றன. எஞ்சிய இரண்டு போட்டிகள் அகமதாபாத்தில் நாளை மறுநாள் முதல் துவங்கும். அதனைத் தொடர்ந்து அதே மைதானத்தில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் மார்ச் 12, 14, 16, 18, 20 ஆகிய தேதிகளில் நடைபெறும். இதில் பங்கேற்கும் இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், ஐபிஎல் 13ஆவது சீசனில் அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவ் (மும்பை இந்தியன்ஸ்), ராகுல் தேவத்தியா (ராஜஸ்தான் ராயல்ஸ்), இஷான் கிஷன் (மும்பை இந்தியன்ஸ்) ஆகியோர் புதுமுக வீரர்களாக வாய்ப்பு பெற்றுள்ளனர். மேலும், ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்திற்குத் தேர்வாகி பின் காயம் காரணமாக விலகிய தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர்களுக்கு சச்சின் உட்பட பல கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் வெளியிட்ட ட்வீட்டில், “இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்குத் தேர்வான சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ராகுல் தேவத்தியா, வருண் சக்கரவர்த்தி ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள். இந்தியாவுக்காக விளையாடுவது எந்த ஒரு வீரருக்கும் மிகப்பெரிய கௌரவம். நீங்கள் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகிறேன்” என்றார். ஹர்பஜன் சிங் வெளியிட்ட ட்வீட்டில், “இறுதியாக இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் இடம் பிடித்துவிட்டார். வாழ்த்துக்கள்” எனப் பதிவிட்டுள்ளார். இர்பான் பதான்: உங்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துவிட்டது சூர்யகுமார். வாழ்த்துக்கள். இஷான் கிஷன், ராகுல் தேவத்தியாவுக்கும் எனது வாழ்த்துகள்.

ஆர்.பி.சிங்: இந்திய அணிக்குத் தேர்வாகியுள்ள சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ராகுல் தேவத்தியா ஆகியோரின் எதிர்காலம் சிறக்க எனது வாழ்த்துக்கள். மேலும் பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்திய அணியில் இடம்பெற்றது குறித்து ட்வீட் வெளியிட்ட சூர்யகுமார், கனவில் இருப்பதைப்போல் உணர்கிறேன் எனப் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார். டி20 அணியில் தமிழக வீரர் நடராஜனின் பெயரும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. டி 20 ஐ தொடரில் ஜஸ்பிரீத் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில், புவனேஷ்வர் குமார் நீண்ட காயம் நீக்கப்பட்ட பின்னர் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பினார். வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ஷெல்டன் கோட்ரெல்லின் ஐபிஎல் போட்டியில் கடந்த ஆண்டு ஒரு ஓவரில் ஐந்து சிக்ஸர்களை அடித்த தவாட்டியாவுக்கு அணியில் இடம் கிடைத்தது.

Be the first to comment on "வெற்றிநடை போடுங்கள்! இளம் வீரர்களை வாழ்த்தும் சச்சின்!"

Leave a comment

Your email address will not be published.