விராட் கோலி மற்றும் அஜிங்க்யா ரஹானே கேப்டன் பதவி ஒன்றுதான்- ரவிச்சந்திரன் அஸ்வின்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அபாரமாக செயல்பட்டு முன்னணி பேட்ஸ்மேன்கள் ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லபுஷேன் போன்றவர்களை அச்சுறுத்தி வந்தார். பேட்டிங்கிலும் குறிப்பிடத்தகுந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில் ஆஸ்திரேலிய தொடர் குறித்து பத்திரிகையாளர் ஒருவரிடம் கலந்துரையாடிய போது பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

தனக்கு சரியாக தெரியவில்லை. தனிப்பட்ட முறையில் என்ன கூற விரும்புகிறேன் என்றால், அவர்கள் நிச்சயம் குறைத்து மதிப்பிட்டிருக்கிற மாட்டார்கள். பௌலர்கள் சவால் அளிக்கும் வகையில் செயல்படுவார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். 36 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆன பிறகு, அதிலிருந்து மீள்வதற்கு குறுகிய காலத்திற்குள் நாம் வழிகளைக் கண்டுபிடித்துவிட்டோம். அடுத்த ஒவ்வொரு போட்டிகளிலும் இந்தியத் தரப்பு சவால் அளிக்கும் வகையில் விளையாடியது.

2016ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட போதிலிருந்தே எனது பேட்டிங் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. நான் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி வருகிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன்கள் குவிப்பது எளிதல்ல. இதைச் சிலர் புரிந்துகொள்வது கிடையாது.

                பந்துவீச்சில் கவனம் செலுத்த வேண்டும் என்பதுதான் என்னுடைய குறிக்கோள். சில இன்னிங்ஸில் சரியாக பேட்டிங் செய்யவில்லை எனக் கூறி அணியிலிருந்து நீக்குவது சரியானதல்ல. பந்துவீச்சில் நான் எவ்வாறு செயல்படுகிறேன் என்பதைப் பாருங்கள். வெளிநாட்டு மைதானங்களில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளேன். சிறந்த ஸ்பின்னர் எனச் சொல்லும் அளவிற்குப் பல சாதனைகளைப் படைத்துள்ளேன்.

இல்லை. என்னுடைய திட்டத்தைச் சரியான முறையில் செயல்படுத்த வேண்டும் என்பது மட்டுமே குறிக்கோள். கேப்டனின் பொறுப்பு, அணி இக்கட்டான நிலைக்குச் செல்லும்போது வீரர்களை உற்சாகமாக வைத்திருப்பதுதான். களத்தில் சக வீரருக்கு உதவி செய்வதும் தலைமைத்துவம்தான்.

யாரையும், யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்க விரும்பவில்லை. இந்திய அணி டிரஸ்ஸிங் ரூமில் (விளையாட்டின் போது) திறமையான வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் இருப்பதால்தான் கடந்த காலங்களில் சில அற்புதமான வெற்றிகளைப் பெற்றதாக நான் கருதுகிறேன். விராட் கோலி, அஜிங்க்ய ரஹானே இருவரும் சிறந்தவர்கள். கேப்டன்ஸியில் அவ்வளவாக மாற்றங்கள் எதுவும் இல்லை.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் வெற்றியின் பின்னர் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பிஷன் சிங் பெடி விராட் கோலி முன்வந்து வரவிருக்கும் இங்கிலாந்து தொடரில் அஜிங்க்ய ரஹானேவுக்கு கேப்டன் பதவியை வழங்க வேண்டும் என்று கூறி தனது கருத்தை முன்வைத்துள்ளார் மேலும் பல முன்னாள் வீரர்கள் இதைப் பற்றி கூறியுள்ளனர்.

Be the first to comment on "விராட் கோலி மற்றும் அஜிங்க்யா ரஹானே கேப்டன் பதவி ஒன்றுதான்- ரவிச்சந்திரன் அஸ்வின்"

Leave a comment

Your email address will not be published.


*