விராட் கோலி மகத்தான பங்களிப்பு தந்த அனைத்து பயிற்சியாளர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

www.indcricketnews.com-indian-cricket-news-0044

நியூ டெல்லி: டி20 உலகக் கோப்பை  2021 தொடரில் அரையிறுதி சுற்றுக்கு செல்லாமல் சூப்பர் 12 சுற்றின் இறுதியில் நமீபியாவை 9 விக்கெட்டு வித்தியாசத்தில்  வீழ்த்தி இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் தன் கடைசி ஆட்டத்தை விளையாடி தாயகம் திரும்பியுள்ளார்.

 மேலும் டி20  கேப்டன் பதவி கிடைத்தது மிகப்பெரிய கவுரவம் என்றும் இந்த உலகக்கோப்பையில் விரும்பத்தக்க முடிவுகள் கிடைக்கவில்லை என்றாலும் நல்ல கிரிக்கெட்டை ஆடினோம் என்று தெரிவித்துள்ள அவர் கடைசி 3 ஆட்டங்களில் காட்டிய தீவிரத்தை முதல் 2 போட்டிகளில் ஒரு 2 ஓவர்கள் அட்டாக்கிங் கிரிக்கெட்டை ஆடியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் டாஸால் தோற்றோம் என்று சாக்குப்போக்கு கூறவிரும்பவில்லை ஏற்கெனவே கூறியது போல் நாங்கள் தைரியமாக ஆடவில்லை.இந்தப் பிரிவு எங்களுக்கு மிகக் கடினமாக இருந்தது என்று தெரிவித்துள்ள அவர் புதன்கிழமையான நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் இந்திய அணி தனது வலிமையான ஆட்டத்தை வெளிப்படுத்த பங்களிப்பு தந்து இந்த டி20 உலகக்கோப்பையுடன் பதவிக்காலம் முடிவடையவிருக்கும் அணியை வழிநடத்திச் சென்ற தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி, பந்துவீச்சின் பயிற்சியாளர் பரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதர் ஆகிய மூவருக்கும் நன்றி தெரிவித்து பாராட்டியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா அரையிறுதி வாய்ப்பை நழுவ விட்டிருந்தாலும்  ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இரண்டு பயிற்சி ஆட்டத்தில் ஷேசாஸ்திரி மற்றும் பீல்டிங் பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதர் இவர்களுடனான வலிமையான கூட்டணியில் உறுதுணையாக இருந்து நமது அணி வெற்றி பெற்றது.

 மேலும் தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரிலேயா ஆகிய இடங்களில் நடைபெற்ற டி20ஐ தொடரில் இவர்களது பதவிக்காலத்தில் தான் இந்திய அணி வெற்றி பெற்றது. இதுகுறித்து அவர் கூறுகையில் “உங்களுடன் அணியாக பயணம் செய்ததில் ஏற்பட்ட அனைத்து நினைவுகளுக்கும்  அற்புதமான பயணத்துக்கும் நன்றி. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் உங்களின் மகத்தான இந்த பங்களிப்பு என்றும் நினைவில் இருக்கும்” என்று அதில் தெரிவித்துள்ளார்.

 நியூசிலாந்துக்கு எதிரான டி20ஐ  தொடர் வரும் நவம்பர் 17 ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் டி20 கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகியதை தொடர்ந்து இந்திய அணியின் புதிய கேப்டனாக ரோகித் சர்மா அதேபோல் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிக்காலமும் நடப்பு உலகக் கோப்பையுடன் நிறைவடைந்துள்ளதால் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட்  நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment on "விராட் கோலி மகத்தான பங்களிப்பு தந்த அனைத்து பயிற்சியாளர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்."

Leave a comment

Your email address will not be published.


*