வாஷிங்டன் சுந்தர்: டெஸ்ட் தொடர்:வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியிலிருந்து திடீர் விலகல்…

www.indcricketnews.com-indian-cricket-news-161

புதுடெல்லி: இந்திய அணியின் ஆல்ரவுண்டர் வீரரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான வாஷிங்டன் சுந்தர் காயம் காரணாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார் என்று  கூறப்படுகிறது ஏற்கெனவே காயம் காரணமாகத் தொடக்க வீரர் ஷுப்மான் கில், வேகப்பந்துவீச்சாளர் ஆவேஷ் கான் ஆகியோர் காயத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது சுந்தரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

ஆகஸ்ட் 4-ம் தேதி சவுத்தாம்டனில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்க இருக்கும் நிலையில், அடுத்தடுத்து வீரர்கள் காயத்தால் போட்டியிலிருந்து விலகி வருகின்றனர். இதுகுறித்து பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில், “பயிற்சியின்போது வாஷிங்டன் சுந்தரின் விரலில் காயம் ஏற்பட்டதாகவும், இந்தக் காயம் குணமடைய  அதிகபட்சம்  6 வாரங்கள் வரை ஓய்வு தேவைப்படும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.

ஆதலால், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சுந்தர் விளையாடமாட்டார்” எனத் தெரிவித்துள்ளனர். ஆனால், இதுவரை பிசிசிஐ சார்பில் அதிகாரபூர்வமாக எதுவும் உறுதிசெய்யப்படவில்லை. இதற்கிடையே, வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கானின் இடதுகை பெருவிரலில் பயிற்சிப் போட்டியின்போது காயமடைந்தார். இதனால், அவருக்கு ஏற்பட்ட அந்தக் காயம் குறித்து மருத்துவக் குழுவினர் பரிசீலித்து வருகின்றார்கள்.

மேலும் அவர் விலகுவதாக அதிகாரபூர்வமாகவும் அறிவிக்கவில்லை. விரைவில்,அடுத்த சில நாட்களில் ஆவேஷ் கான் நிலையும் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுமட்டுமில்லாமல், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரஹானே இருவரும்கூட 100 சதவீதம் உடல் தகுதியுடன் இல்லை என கூறப்படுகிறது. இதனால்தான் இருவரும் பயிற்சிப் போட்டியில்கூட பங்கேற்காமல் விலகியுள்ளார்கள்.

கோலிக்கு முதுகுப் பகுதியில் பிடிப்பு இருப்பதால், ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும், ரஹானேவுக்கு இடது மேல் தொடையில் தசைப்பிடிப்பு இருப்பதால் அவரையும் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் பரிந்துரைத்திருக்கிறார்கள்.எனவே இருவரும் தற்போது ஓய்வுபெற்று வருகின்றனர்.

இது இந்திய அணிக்கு மிகவும் இக்கட்டான சூழலாக அமைந்துள்ளது. தற்போது ஷுப்மான் கில், வாஷிங்டன் சுந்தர் இருவரும் ஏறக்குறைய டெஸ்ட் தொடரிலிருந்து விலகிவிட்ட நிலையில் எந்த இரு வீரர்களை இங்கிலாந்துக்கு பிசிசிஐ அனுப்பப்போகிறது என்பது  அனைவருக்கும் பெரும் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. பிரித்வி ஷா, மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, குர்னல் பாண்டியா ஆகியோருக்கு அதிகமான வாய்ப்புக் கூறிகள் உள்ளன. இனிவரவிருக்கும் போட்டிகளில் இவர்களுக்குப் பதிலாக, யாரை தேர்வு செய்வார்கள் என்பது குறித்து, விரைவில் பிசிசிஐ, இவர்களுக்குப் பதிலாக தேர்வு செய்த வீரர்களின் பெயரை அதிகாரம் பூர்வமாக வெளியிடுமென நம்பப்படுகிறது.

Be the first to comment on "வாஷிங்டன் சுந்தர்: டெஸ்ட் தொடர்:வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியிலிருந்து திடீர் விலகல்…"

Leave a comment

Your email address will not be published.


*