வானிலை காரணமாக கூடுதல் சுழற்பந்து வீச்சாளர் குறித்து கேப்டன் விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.

www.indcricketnews.com-indian-cricket-news-013

மும்பை: இந்தியா-நியூசிலாந்துக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்  கான்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் டிராவில்  முடிவடைந்தது. அடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில், இன்றுமுதல்  நடைபெறவுள்ளது.

 இந்நிலையில், மும்பையில் நேற்று 80% அளவுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக  கூறப்பட்ட நிலையில் பயிற்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. அதேபோல, இன்றைய தினமும் மழைக்கு 50% சதவீதம் வாய்ப்பிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

 இந்த 5 நாட்களில் மழை வாய்ப்பு எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்கலாம் என்ற நிலையில் வானிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றாற்போல் வீரர்களின் கூட்டணியை தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனெனில்,மும்பை மைதானத்தின் பௌலிங் பிட்சின் புற்கள் அதிகமாகவுள்ளது. தற்போது மழையும் இருப்பதால்,  வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தி போட்டியை கட்டுப்பாட்டிதிற்குள் கொண்டு வர வாய்ப்புள்ளது.

இதனால், இந்திய அணியில்  மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே உள்ள நிலையில்  நான்காவதாக முகமது சிராஜை  2வது டெஸ்ட் போட்டியில் களமிறக்கலாம் என்று விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார். மேலும், வானிலை நிலவரம்  எவ்வாறு இருக்கும் என கூற முடியாது நிலையில் வெவ்வேறு சூழ்நிலைகளை சமாளிக்கும் சரியான பந்துவீச்சின் கூட்டணியை தேர்ந்தெடுக்க வேண்டும்.

அந்த கூட்டணி, அனைவரும் புரிந்து ஏற்றுக்கொள்ளும் கூட்டணியாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இதில், ரித்திமான் சகா பற்றி கோலி கூறுகையில், கான்பூரில் நடைபெற்ற டெஸ்ட் மேட்சில் சிறப்பாக விளையாடிய சகாவுக்கு, கழுத்து பிடிப்பு சரியாகி விட்டதாக தெரிவித்துள்ளார்.

அவர் தற்போது நன்றாக இருப்பதாக கூறியுள்ள அவர் , அணியில் ஸ்ரீகர் பாரத்  விளையாடுவாரா அல்லது சகா விளையாடுவாரா என்பதை குழு மேலாண்மை தான் முடிவு செய்யவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.  மேலும், அதிக பவுன்ஸ் கொண்ட மும்பை டிராக்கில் பேட்டர்கள் ஒழுக்கமாக விளையாடினால்  ஷாட்களுக்கு மதிப்பு கிடைக்கும் . இது மிகவும் ஒழுக்கம் கோரும் ஆடுகளம் மற்ற இடங்களுடன் ஒப்பிடுகையில் ஒழுக்கத்திற்கு உண்டான வெகுமதி இங்கு அதிகம். சில இடங்களில் வேகப்பந்து வீச்சாளர்களை விட சுழற்பந்து வீச்சாளர்களே அதிகம் ஆதிக்கம் செலுத்த முடியும்.

ஆனால், வான்கடே மைதானத்தில்  அவ்வாறு இல்லை. குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்களும், பேட்டர்களும் இந்த ஆடுகளத்தில் விளையாடுவதை  விரும்புவார்கள்   என கேப்டன் மிகச்சிறந்த முறையில் குறிப்பிட்டுள்ளார்.

 கான்பூரில் நடைபெற்ற மதல் டெஸ்ட் போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள விராட் கோலி, “நான் விளையாட்டைப் பார்த்தேன்.ஒரு குழுவாக செயல்பட்டு ரஹானேவும் மற்ற வீரர்களும் தங்களால் முடிந்த அனைத்தையும் முயற்சித்து சிறப்பாக விளையாடியுள்ளனர். இதில், கடைசி 1 மணி நேரத்தை ஆட்டத்தை சிறப்பாக கொண்டு சென்ற ரவிந்தரா மற்றும் அஜாஸ் படேல் இருவருக்கும் எல்லா பெருமையும் சேரும்”.  என தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

Be the first to comment on "வானிலை காரணமாக கூடுதல் சுழற்பந்து வீச்சாளர் குறித்து கேப்டன் விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார்."

Leave a comment

Your email address will not be published.


*