வானிலையால் இந்தியா காப்பாற்றப்பட்டது – இந்திய ரசிகர்களை வம்புக்கு இழுக்கும் மைக்கேல் வாகன்

www.indcricketnews.com-indian-cricket-news-24

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும், வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிக்கும் இடையேயான போட்டி,நேற்று முதல் நடைபெறுவதாக இருந்தது. முதல் முறையாக ஐசிசி நடத்தும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்பதால் இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இங்கிலாந்து நாட்டின் சவுத்தம்டன் மைதானத்தில் அந்நாட்டு நேரப்படி இன்று காலை 10.30 மணி அளவில் (இந்திய நேரப்படி இன்று மாலை 3.30 மணி) போட்டி நடைபெறுவதாக இருந்தது.ஆனால், சவுத்தம்டனில்நேற்று காலை முதல் மழை பெய்யது வருகிறது. இதனால், இந்தியா – நியூசிலாந்து இடையேயானஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுவதில் கால தாமதம் ஏற்பட்டது. போட்டிக்கான டாஸ் இன்னும் சுண்டப்படவில்லை. டாஸ் கூட சுண்டப்படாமல் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.மழை தொடர்ந்து பெய்து வருவதால் மைதானத்தில் ஈரப்பதம் ஏற்பட்டு, வேகப்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமாக மாறியுள்ளது. பொதுவாக, மைதானத்தில் ஈரப்பதம் இருந்தால் பந்துகள் நல்ல முறையில் ஸ்விங் ஆகும். சுழல் பந்துவீச்சாளர்களால் சிறப்பாக சோபிக்க முடியாது.விக்கெட் எடுப்பதற்கு மிகவும் கடினமாக இருக்கும். இதனால் நியூசிலாந்து அணி 5 வேக்கப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க வாய்ப்புள்ளது. உணவு இடைவேளை வரை போட்டி தடைபட்டுள்ளது.இதனையடுத்து, முதல்நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளதால் மாற்று நாளாக (ரிசர்வ் டே) 6-வது நாளில் ஒதுக்கப்பட்டு அந்த நாளிலும் போட்டி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.வானிலையால் இந்தியா காப்பாற்றப்பட்டதை நான் பார்க்கிறேன் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.மழை காரணமாக போட்டி தடைபட்டுள்ளதால் கிரிக்கெட் ரசிகர்கள் இங்கிலாந்து வானிலை தொடர்பாக டுவிட்டரில் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.இந்நிலையில், வானிலையால் இந்தியா காப்பாற்றப்பட்டுள்ளதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மைக்கேல் வாகன் தனது டுவிட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ள பதிவில்,வானிலையால் இந்தியா காப்பாற்றப்பட்டதை நான் பார்க்கிறேன் #உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்’ என தெரிவித்துள்ளார்.இந்தியாவை கிண்டல் அடிக்கும் வகையில் மைக்கேல் வாகனின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிற்கு பதிலடி கொடுக்கும் வகையால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரிலும் இந்திய வீரர்களின் விளையாட்டை மைக்கேல் வாகன் கிண்டல் அடித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Be the first to comment on "வானிலையால் இந்தியா காப்பாற்றப்பட்டது – இந்திய ரசிகர்களை வம்புக்கு இழுக்கும் மைக்கேல் வாகன்"

Leave a comment

Your email address will not be published.


*