வர்ணனையாளராக மாறும் தினேஷ் கார்த்திக்: எப்போது தெரியுமா?

Dinesh Karthik joins commentary in limited-overs series between India and England
Dinesh Karthik joins commentary in limited-overs series between India and England

தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராக அவதாரம் எடுக்கவுள்ளார். இந்தியா – இங்கிலாந்து இடையிலான லிமிடட் ஓவர்ஸ் தொடரில் இந்தப் பணியை மேற்கொள்கிறார்.

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக், கடந்த 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிக்குப் பின் இந்திய அணியில் இடம்பெறவில்லை. இதுவரை 94 ஒருநாள், 32 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். மகேந்திரசிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு அறிவித்த பிறகு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக்கை அணித் தேர்வாளர்கள் திரும்பிக் கூட பார்க்கவில்லை.

அணியில் திறமையான இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் கே.எல்.ராகுல், ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் போன்றவர்களுக்கு இடையில் கடும் போட்டி நிலவுவதால் மூத்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக்கை இந்திய அணி தேர்வாளர்கள் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இருப்பினும், தினேஷ் கார்த்திக் இன்னும் தனது ஓய்வை அறிவிக்காமல் இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார்.

இந்நிலையில், தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராகவும் அவதாரம் எடுக்கவுள்ளார். இந்தியா, இங்கிலாந்து இடையிலான டி20, ஒருநாள் தொடர்களின்போது தினேஷ் கார்த்திக்கின் குரல் டிவியில் ஒலிக்கும். இதற்குமுன் அணியிலிருந்து ஓய்வு அறிவிக்காமல் ஹர்பஜன் சிங், கவுதம் கம்பீர், பார்தீப் படேல், ராபின் உத்தப்பா போன்றவர்கள் கிரிக்கெட் வர்ணனையாளராகப் பணியாற்றியிருக்கிறார்கள். அந்த லிஸ்ட்டில் தற்போது தினேஷ் கார்த்திக்கும் இணையவுள்ளார். இவருடன் சேர்த்து டேவிட் லாயிட், நாசர் உசேன், இயன் வார்ட், எபோனி ரெயன்போர்ட்-ப்ரெண்ட், மைக்கேல் ஆதர்டன், ராப் கீ மற்றும் ஸ்டூவர்ட் பிராட் போன்றவர்களும் வர்ணனை செய்யவுள்ளார்கள். தினேஷ் கார்த்திக் தற்போது விஜய் ஹசாரே டிராபி தொடரில் தமிழக அணிக்காக விளையாடி வருகிறார். லீக் போட்டிகள் மார்ச் 1ஆம் தேதி நிறைவடைகிறது. இறுதிப் போட்டி மார்ச் 14ஆம் தேதி நடைபெறும். ஒருவேளை தமிழக அணி இறுதிப் போட்டிக்குத் தேர்வாகும் பட்சத்தில் வர்ணனையாளர் பணியைத் தாமதமாகத் தொடங்குவேன் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

“எனக்கு விஜய் ஹசாரே டிராபிதான் முக்கியம். ஒருவேளை நாங்கள் இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் பட்சத்தில் தாமதமாகத்தான் வர்ணனையாளர் பணியில் இணைவேன்” எனக் கூறியுள்ளார். இந்தியா, இங்கிலாந்து இடையிலான 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்கள் மார்ச் 12ஆம் தேதி முதல் துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. . . விஜய் ஹசாரே டிராபியின் லீக் நிலை மார்ச் 1 ஆம் தேதியுடன் முடிவடையும், பிப்ரவரி 28 ஆம் தேதி தமிழகம் தங்களது கடைசி போட்டியை விளையாடும், இருப்பினும், மார்க்யூ நிகழ்வின் இறுதிப் போட்டி மார்ச் 14 ஆம் தேதி நடைபெறும்.

Be the first to comment on "வர்ணனையாளராக மாறும் தினேஷ் கார்த்திக்: எப்போது தெரியுமா?"

Leave a comment

Your email address will not be published.


*